கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொரியாவில் உள்ள இலங்கையர்கள் ரூ. 4 லட்சம் நன்கொடை

ஏப்ரல் 15, 2020

'அபி வெனுவென் அபி- 67வது குழு' ஐச் சேர்ந்த கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக 400,000 ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அனுராத கயன் சஞ்சீவ என்பவரினால் ரூபாய் நான்கு லட்சம் பெறுமதியான காசோலை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கையளிக்கப்பட்டது.