சுவதேசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினால் படையினருக்கு கையளிக்க ஒரு தொகை சவர்க்காரம் மற்றும் கிருமி நீக்கும் திரவம் என்பன அன்பளிப்பு

ஏப்ரல் 16, 2020

வரையறுக்கப்பட்ட சுவதேசி இன்டஸ்ட்ரீஸ் வேர்க்ஸ் நிறுவனத்தினால் ஒரு தொகை சவர்க்காரம் மற்றும் கிருமி நீக்கும் திரவம் என்பன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறித்த பொருட்கள், புதிய கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முன்னணியில் இருந்து செயற்படும் படையினருக்கு வழங்கி வைப்பதற்காக பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

பொருட்களை கையளிக்கும் இந்த நிகழ்வில், சுவதேசி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் சுலொந்தர மாரசிங்க, தலைமை நிர்வாக அதிகாரி அமில உடவத்த மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதி முகாமையாளர் சமிந்த ஜெயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.