ஆனந்தா கல்லூரியின் 75 - 80களில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் அன்பளிப்பு

மே 05, 2020

ஆனந்தா கல்லூரியின் 75 - 80களில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டன.
 
பாதுகாப்பு அமைச்சில் வைத்து அளிக்கப்பட்ட இந்த நன்கொடையினை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (மே,05) பெற்றுக்கொண்டார்.
 
ஆனந்தா கல்லூரியில் 75-80களில் கல்வி கற்ற பழைய மாணவர்களான அமல் ரூபசிங்க, சகாதேவ சேனநாயக்க, லக்ஷ்மண ஹேவா பதகே, உபுல் ஜெயசூரிய மற்றும் சன்ன பெரேரா ஆகியோர் நன்கொடையை பாதுகாப்புச் செயலாளரிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.