சமூக ஐக்கியத்தை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு ஹஜ் பெருநாள் வழிவகுக்கும் - ஜனாதிபதி

ஆகஸ்ட் 01, 2020

இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ் பெருநாள்
வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹஜ்ஜின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக ஜனாதிபதி விடுத்துள்ள தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனித அல்குர்ஆனின் போதனைகளின் வழி நின்று வரலாறு நெடுகிலும் ஏனைய அனைத்து சமூகங்களுடனும் ஐக்கியமாக வாழ்ந்து வரும் எமது நாட்டு முஸ்லிம்கள் எமது தேசத்தின் சுபீட்சத்திற்காக வழங்கிவரும் பங்களிப்புகள் எதிர்காலத்திலும் தொடரும் என நான் நம்புகிறேன். இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.