ஜனாதிபதிக்கு ரணவிரு கொடி அணிவிப்பு

மார்ச் 06, 2019

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு முதலாவது ரணவிரு கொடியினை அணிவிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச், 05) இடம்பெற்றது.

நாட்டில் புரையோடிக் காணப்பட்ட பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை நிறைவு பெற்று ஒரு தசாப்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதியினால் 'படைவீரர்கள் ஞாபகார்த்த வருடம்' அறிவிக்கப்பட்டது.

முதலாவது ரணவிரு கொடி ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் J.J.P.S.T லியனகே அவர்களினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'ரணவிரு' நினைவு தினம் செவ்வாய் கிழமை (05) தொடங்கி எதிர் வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.