நவம்பர் 15, 2020
அனுராதபுர மிரிஸவெட்டிய மகா சேயவில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட பெளத்த மத அனுஸ்டானங்களில் ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.
இந்த மத அனுஷ்டான நிகழ்வு இலங்கை மற்றும் உலக நாடுகளில் பரவியுள்ள தொற்றுநோய் நிலைமைகள் முழுமையாக சீரடைய ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பிரதமரும் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கொடிய கொரோனா வைரஸ் தோற்று பரவியுள்ள வேளையில் அதற்கு எதிராக போராடும் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஆசி வேண்டி தர்ம சொற்பொழிவின் போது வண. மகா சங்கத்தினரால் அனு சாசனம் வழங்கப்பட்டது.
மேலும் இது போன்ற நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நவம்பர் 13ம் திகதி அனுராதபுரம் ருவன்வெளி மகா சேயவில் இடம்பெற்றது.
பிளக் நோய் மற்றும் ஏனைய தொற்றுநோய் காலங்களில் பிரித் மற்றும் ரத்ன சூத்திரம் என்பன பாராயணம் செய்யப்பட வேண்டும் என்ற புத்த பிரானின் போதனைக்கு அமைவாக பிரித் மற்றும் ரத்ன சூத்திரம் என்பன பாராயனம் செய்யப்பட்டது.
தீய ஆவிகள் அகற்றவும் தீங்கான செயற்பாடுகள் என்பவற்றிலிருக்கு சமுதாயத்தை பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு நடவடிக்கையாக பிரித் பாராயயனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நோய்கள், பஞ்சம் போன்றவை ஏற்பட்ட வேளையில் அவற்றில் இருந்து விமோசனம் பெறுவதற்காக விஷல நகரில் பௌத்த துறவிகளால் இவ்வாறு பிரித் பாராயணம் செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் உள்ளன.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம், சுகாதாரத்துறை மற்றும் ஏனைய அரச துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.