ஜனாதிபதி ஊடக விருது விழாவில் ஜனாதிபதி அவர்கள் கலந்து சிறப்பிப்பு

ஏப்ரல் 11, 2019

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் வெகுசன ஊடக மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களும் கலந்து கொண்டார்.

இவ் ஊடக விருது விழாவின் பிரதான நோக்கமாக ஊடகவியலாளர்களின் திறன் மற்றும் சிறந்த ஆற்றல்களை மதிப்பீடு செய்வது மற்றும் சமூக பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு ஊடக கலச்சாரத்தை ஏற்படுத்துவதுமாகும்.

மேலும், நன்கு தகவலறிந்த சிவில் சமூகம் ஒன்றை உருவாக்கும் வகையில் ஊடகத்துறையை ஊக்குவிப்பதுடன், அனைத்து ஊடகத் துறைகளையும் உள்ளடக்கி அவர்களின் செயல்திறன்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு அரச ஆதரவை வழங்குவதும் இதன் நோக்கமாக காணப்படுகிறது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில், அனுபவம் மிக்க மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் பலர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இதன்போது சிறந்த ஊடகவியலாளர்கள் நால்வருக்கு “ இலங்கை ஊடக அபிமானி” விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அச்சக மற்றும் இலத்திரனியல் ஊடக துறையினர் உட்பட விஷேட அழைப்பின்பேரில் வருகைதந்த பலரும் கலந்துகொண்டனர்.