“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் பல்வேறு விசேட நிகழ்ச்சித்திட்டங்கள்

ஆகஸ்ட் 29, 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டம் தற்போது யாழ் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெறுவதுடன், அதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நேற்றைய (27) தினம் நெடுந்தீவில் இடம்பெற்றது.

அரச அதிகாரிகளின் கவனத்தை பெறாத இத்தீவில் வாழும் 1224 குடும்பங்களை சேர்ந்த சுமார் 4200 குடும்பங்களை இலக்காகக்கொண்ட பல்வேறு சமூக நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் நேற்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதேவேளை கிராமசக்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றி மக்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக முப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு விழிப்புணர்வு வேலைத்திட்டம் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்ட தொடரின் 07வது நிகழ்ச்சித்திட்டம் கடந்த 23ஆம் திகதி யாழ் மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 30ஆம் திகதி வரை இது இடம்பெறுகின்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் மாவட்ட மட்டத்தில் இதுவரை தீர்க்கப்படாதுள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அரச பொறிமுறையை கீழ் மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதாகும்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய தேசிய நிகழ்ச்சித்திட்டங்களான தேசிய உணவு உற்பத்தி, போதைப்பொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய்த் தடுப்பு, தேசிய சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர்களை பாதுகாப்போம், கிராம சக்தி, ஸமார்ட் ஸ்ரீ லங்கா போன்ற முக்கிய நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகளை வினைத்திறனாகவும் முறையாகவும் மக்களுக்கு பெற்றுக்கொடுத்து அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மக்கள் சேவை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை துரிதப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

நன்றி: pmdnews.lk