ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை

ஒக்டோபர் 17, 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்குவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களால் கோரப்படும் வகையில் அவர்களுக்கு தேவையான உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு துறை பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நன்றி: pmdnews.lk