--> -->

நிகழ்வுகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் மாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் புத்தகங்கள் அன்பளிப்பு

மாங்குளம் மகா வித்தியாலயம் மற்றும் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் றோயல் கல்லூரியின் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் நூலகப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சீனாவில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட் -2023’ துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவத்திற்கு ‘சிறந்த குழுப்பணி’ விருது

சீனாவின் உரும்கியில் சீன மக்கள் ஆயுதப் பொலிஸ் (PAP) படையின் பயிற்சி தளத்தில் ஜூலை 9-16 திகதிகளில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட்-2023’ சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவ துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு சிறந்த குழுப்பணிக்கான விருது வழங்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஜப்பான் கடற்படை பிரதிநிதிகள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ
பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தனர்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) பிரதிநிதிகள் குழுவொன்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை  பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

துருக்கி தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் அதிமேதகு டமெட் ஷெகர்ஜியளு, பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப்படையினரால் இரணைமடுவில்
விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுப்பு

இரணைமடு பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அண்மையில் கிளிநோச்சி கல்மடுநகர் ஆரம்பப் பாடசாலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் மற்றும் பிள்ளைகளுக்கான பாடசாலை சீருடைகள் இலங்கை விமானப்படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

‘கொழும்பு திறந்தவெளி வில்வித்தை சர்வதேசப் போட்டி’நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் இன்று (16) இடம்பெற்ற கொழும்பு திறந்தவெளி வில்வித்தை சர்வதேச போட்டி நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும்
கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2023

இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவான மற்றும் ஒன்றோடொன்று இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முத்தரப்பு 7வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு நேற்று (12 ஜூலை 2023) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்

இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனதிபதியும்  ஆயுதப்படை பிரிவின் சேனாதிபதியுமான  அதிமேதகு .ரணில் விக்ரமசிங்க அவர்களின் அனுமதியுடன் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால்  புதிய விமானப்படை தலைமை தளபதியாக  எயார் வைஸ்  மார்ஷல்  ஆர்.எஸ் விக்ரமரத்ன அவர்களுக்கு  கடந்த 2023 ஜூலை 09ம்  திகதி  நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

புதிய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை மாரியாதை நிமித்தம் இன்று (ஜூலை 06) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் முஹம்மட் சப்தர் கான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் முல்லைத்தீவைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பு

முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வின் போது தகுதியான குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பருத்தித்துறை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தில்
இராணுவப் படையினர் இணைந்தனர்

இலங்கை இராணுவ (SLA) துருப்புக்கள் பருத்தித்துறை பிரதேச மக்களுடன் இணைந்து சத்கோட்டை மற்றும் ஊறணி கடற்கரைப் பகுதியை அண்மையில் சுத்தப்படுத்தினர்.




பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தேசிய தொழில் கண்காட்சி நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (ஜூன் 25) கலந்து கொண்டார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பங்களாதேஷ் பாதுகாப்பு கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் அவர்கள் இன்று (ஜூன் 22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சர்வதேச யோகா தினம் - 2023

யோகாவின் மூலம் கிடைக்கும் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை மேம்படுத்தவும் இது ஒரு தளமாக செயல்படுகிறது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து பதில்
பாதுகாப்பு அமைச்சர் ஆசி பெற்றார்

பதில் பாதுகாப்பு அமைச்சர், கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் திங்கட்கிழமை (19) மாலை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் நந்திக்கடல் பகுதியில் சதுப்புநில தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் முன்னெடுப்பு

அண்மையில் ‘உலக சமுத்திர தினத்தை’ ஒட்டி முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள நந்திக்கடல் களப்பை அண்டியுள்ள சதுப்புநிலங்களில் இலங்கை இராணுவப் படையினரால் சதுப்பு நில தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் சனிக்கிழமை (10) முன்னெடுக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

10 வது Damso சர்வதேச செஸ் விளையாட்டு போடியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட 10 வது Damso சர்வதேச செஸ் சம்பியன்ஷிப் போட்டியில், அரச மற்றும் வர்த்தக சேவை அணி பிரிவில் இலங்கை இராணுவ அணி அண்மையில் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நாட்டிற்குள் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு

வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் நெற்பயிர் சாகுபடி செய்யும் பகுதிகளில் ட்ரோன் தொழில்நுட்ப முறை பயன்படுத்தல்

மிக நவீன மற்றும் விஞ்ஞான நடைமுறைகளை கடைப்பிடித்து, இலங்கை இராணுவம் முதன்முறையாக வெள்ளிக்கிழமை (ஜூன் 02) காலை ஜயவர்தனபுர இலங்கை இராணுவ தலைமையக வளாகத்தை சுற்றியுள்ள 8.5 ஏக்கர் பரப்பளவில் இராணுவ நெற் பயிர்ச்செய்கைகளுக்கு கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகளை தெளிப்பதற்கு சோதனை அடிப்படையில் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.