யாழில் தேவையுடைய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணிப்பு

மே 21, 2020

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய விடு இலங்கை இராணுவத்தினரால் பயனாளிக்கு நேற்றைய தினம் (மே, 20) கையளிக்கப்பட்டது.

இந்த புதிய வீட்டின் சாவி, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் பயனாளியான மோகன் உத்தரராஜனியிடம் அன்று காலை கையளிக்கப்பட்டது.

இதற்கமைய வீட்டின் நிர்மாணப் பணிகளுக்காக நிதியுதவி,யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தினால் அளிக்கப்பட்டது. வீட்டின் நிர்மாணப் பணிகளுக்கான ஆளணிகள் 513 ஆவது பிரிகேட்டின் கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இலங்கையில் ஆயுத படையணியின் 11வது படையணியின் படையணி, பொறியியலாளர் சேவை படையணியின் 5வது பொறியியலாளர் சேவை படையணியினால் வழங்கப்பட்டது.

இதேவேளை தாபோதரன் விஸ்வநாதன் என்பவரின் நன்கொடை மூலம் நிர்மாணிக்கப்பட்ட குழாய்க் கிணறு ஒன்றும் இதன்போது அக்குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது.

வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.