--> -->

தீவிரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான செயற்பாட்டில் விசேட அதிரடிப்படையின் பங்கு அளப்பரியது - பாதுகாப்பு செயலாளர்

மே 29, 2020

 

 

  • போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக செயற்படுவதில் விசேட அதிரடிப்படையின் பங்களிப்பு அதிகமாகும் என தெரிவிப்பு

  • மத ரீதியிலான தீவிரவாத குழுக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் விசேட அதிரடிப்படைக்கு அதிக பொறுப்பு உள்ளது என தெரிவிப்பு

  • தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது விசேட அதிரடிப் படைகளின் தியாகங்களுக்கு பாராட்டு

தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான செயற்பாட்டில் விசேட அதிரடிப்படையின் பங்கு அளப்பரியதாகும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கான கண்ணி விஜயமொன்றை மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர், படையினர் மத்தியில் உரையாற்றியபோது தேசிய பாதுகாப்பினை பேணுவதில் விசேட அதிரடிப்படையினரின் பங்கு அளப்பரியதாகும் என தெரிவித்ததுடன் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்ததன்மூலம் அவர்கள் தமது ஆளுமைகளை நிரூபித்துள்ளனர் என தெரிவித்தார்.
 
இலங்கை பொலிஸாரின் விசேட படைப்பிரிவாக மிளிரும் விசேட அதிரடிப்படையினர், ஒரு சட்ட அமுலாக்க அதிகாரியாக மட்டுமல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுவதிலும் பயிற்சி பெற்ற ஒரு சக்தியாக உள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்ரமரத்ன விக்ரமாதித்தன் உடன் விஜயம் செய்திருந்த பாதுகாப்புச் செயலாளரை விசேட அதிரடிப்படையின் தளபதி சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) குணரத்னவின் விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கான விஜயம், அண்மையில் பாதுகாப்பு துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட முதல் விஜயமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்போது படு காயமடைந்த 700 க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப் படை வீரர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர், இலங்கையில் நிலவிய 30 ஆண்டுகால பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் விசேட அதிரடிப்படை வீரர்கள் பலர் தங்களது உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இராணுவ அதிகாரியாக தனது மூன்று தசாப்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், விசேட அதிரடிப்படை வீரர்கள் விசேட பயிற்சி பெற்ற வீரர்கள் எனவும், அவர்கள் போரின் போது தங்கள் போர் திறனை வெளிப்படுத்தியதோடு, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளின் போதும் தமது உயர்ந்தபட்ச தொழிற் திறனை பிரயோகித்த தாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் போது தனித் தனியாக இயங்கிய அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தையும் குணரத்ன எடுத்துரைத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமையவாக தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து வலையமைப்புக்களையும் புதுப்பிக்க படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

1984 ஆம் ஆண்டில் விசேட அதிரடிப்படையை மீண்டும் நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்த மறைந்த ரவி ஜெயவர்தனவுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

‘80 களின் முற்பகுதியில் ரணசிங்கக் குழு அறிக்கையானது, பொலிஸ் திணைக்களம் தற்போது கொண்டுள்ள சிறப்புப் பிரிவுகள் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைச் சந்திக்கும் திறனை கொண்டிருக்காத காரணத்தினால் பொலிஸ் திணைக்களத்திற்கு உதவ விஷேட அதிரடிப் படையை நிறுவ வேண்டிய அவசியத்தை பரிந்துரைத்தது.

பொலிஸ் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பொலிஸாருக்கு உதவுவதற்கும் இந்த பிரிவு முதலில் வடக்கு மாகாணத்தில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த காலகட்டத்தில், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மறைந்த ரவி ஜெயவர்தன,வெளிநாட்டு பயிற்றுநர்களின் மூலம் விசேட அதிரடிப் படையினருக்கு சிறப்பு பயிற்சி பெற்றுக்கொடுப்பதில் தீவிர அக்கறை காட்டினார்.