--> -->

செயலணிகள் இரண்டின் தலைவராக பாதுகாப்பு செயலாளர்

ஜூன் 03, 2020

ஒழுக்க நெறியுள்ள, குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்துடன் கூடிய பாதுகாப்பான தேசமொன்றை கட்டி எழுப்பும் வகையில் 13 அங்கத்தவர்கள்ளை உள்ளடக்கிய  ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலணியின் தலைவராக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளர்.   

குறித்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (ஜூன், 2) வெளியிடப்பட்டுள்ளது.  

முப்படை தளபதிகள்,  முப்படையின்  சிரேஷ்ட உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உள்ளடக்கியதாக  மேற்படி ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.  

பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) சமன் திசாநாயக்க இச்செயலணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   

இதேவேளை, 11 அங்கத்தவர்களைக் கொண்ட கிழக்கு மாகான தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவ செயலணியின் தலைவராகவும் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொல்பொருள் சக்ரவர்த்தி வண. எல்லாவல மேதானந்த தேரர்,  வடக்கு மற்றும் கிழக்கு மாகானங்களுக்கான பிதாம விகாராதிபதி வண. பணமுரே திலகவன்ச தேரர், பல்கலைக்கழக கல்வியாளர்கள்,அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவ செயலணியில் அங்கத்தவர்களாவர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட குறித்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (ஜூன், 2) வெளியிடப்பட்டுள்ளது.