--> -->

ஆர்பாட்டக்காரர்களை கலைக்க நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸார் செயல்பட்டனர் - பாதுகாப்பு செயலாளர்

ஜூன் 11, 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட கண்டிப்பான தனிமைப்படுதல் சட்டவிதிகளுக்கு அமைவாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரிலுமே முன்னணி சோசலிஸ கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பொலிசாரினால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணம் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணி சோசலிசக் கட்சியின் 53 உறுப்பினர்களை கைது செய்தமைதொடர்பாக கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அரசாங்கம், பொது மக்களின் உயிரை மீண்டும் ஆபத்துக்கு உட்படுத்த ஒருபோதும் இடமளிக்காது என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படை, பொலிஸ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் அளப்பரிய அர்ப்பணிப்புடன் தமது பணிகளை முன்னெடுத்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக முடக்க நிலையில் காணப்பட்ட மக்களின் நடமாட்டம் சில கட்டுப்பாடுகளுடன் அண்மையில் திறக்கப்பட்டது. எனவே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த முறையை சீர்குலைக்க யாரையும் நாம் அனுமதிக்க முடியாது, ”என அவர் தெரிவித்தார்.

வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தினால் கிருமி தொற்று நீக்கல் திரவத்தை பாதுகாப்பு அமைச்சிற்கு நன்கொடையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் குணரத்ன, தொற்றுநோயாக அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது நியாயமற்ற ஒரு செயல் என அவர் தெரிவித்தார்.

"முழு நாடும் பாரிய சவாலுக்கு முக்ம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது, இதன்போது சமூகத்தில் உள்ள அனைவருமே தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளில் அவரவருக்கு சாத்தியமான வழிகளில் பங்களிப்பு செய்தனர், ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்திய சில நாட்களிலேயே, அவர்கள் இவ்வாறான ஒரு போராட்டத்தை நடத்த முயன்றுள்ளனர்" என மேலும் தெரிவித்தார்.

வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட்டினால் 50,000 லீட்டர் கிருமி தொற்று நீக்கும் திரவத்தை பாதுகாப்பு செயலாளரிடம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கும் நிகழ்வு அந்நிறுவனத்தின் கொலனாவ தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கிருமி தொற்று நீக்கும் திரவம் பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கக்கப்பட்டது.

தொற்றுநோய்க்கு எதிராக போராடும் முப்படை, பொலிஸ் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அன்பளிப்பு வழங்கிய முதற்தா நிறுவனமான வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்
நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

"தேசிய பாதுகாப்பு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய முன்னுரிமை மற்றும் இது ஜனாதிபதியின் தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டது. தேசிய பாதுகாப்பு இல்லாமல் பொருளாதார மறுமலர்ச்சி, கல்வியில் வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பற்றிய எந்த எண்ணமும் பயனற்றதாகவே அமையும் ”என் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அடைந்த சாதனைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சிறப்பான தலைமை மற்றும் தூரநோக்கு என்பனவே காரணமாகும் என அவர் வலியுறுத்தினார்.

"இந்த ஆட்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன்னர் பயன்படுத்தப்பட்ட வழக்கமான கட்டாய நடவடிக்கைகளுக்கு மாறாக பல்வேறு குழுக்கள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப்பட்ட போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் சாதகமாகப் பெறப்பட்டன. இன்றுவரை, அத்தகைய குழு எதுவும் தாக்கப்படவில்லை, இழுத்துச் செல்லப்படவில்லை அல்லது அவர்களுக்கு எதிராக தடியடி, நீர் பீரங்கிகள் அல்லது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்படவில்லை. இதன் மூலம் சிவில் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதில் அரசு சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கு இதுவே தெளிவான சான்று ”என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, பிரதி நிர்வாக பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்
நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.