--> -->

ஹேய்லீஸ் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு துணிகள் அன்பளிப்பு

ஜூன் 12, 2020

வரையறுக்கப்பட்ட ஹேய்லீஸ் குழுமத்தினால் நிருவகிக்கப்படும் தனியாருக்கு சொந்தமான முன்னணி ஹேய்லீஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பு அமைச்சிடம் ஒரு தொகை துணி வகைகளை அன்பளிப்பு செய்துள்ளது.

இராணுவ உருமறைப்பு ஆடைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சுமார் 11,000 மீட்டருக்கும் அதிகமான துணிகளை குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் அமைச்சில் வைத்து  கையளித்துள்ளனர்.

வெப்பம் மற்றும் குளிர் காலங்களில் இராணுவ வீரர்களினால் டீ ஷேர்ட் பாவனைக்காக பயன்படுத்தப்படும் வகையில் இரண்டுவகையான துணிகளை இவ்வாறு அன்பளிப்பு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில், ஹேய்லீஸ் குரூப்பின் தலைவர் மஹான் பதிராஜ், நிர்வாக பணிப்பாளார் / தலைமை நிர்வாக அதிகாரி, ரொஹான் குணதிலக, மனிதவள மற்றும் நிர்வாக பொது முகாமையாளர், பிரசன்ன பதிரன ஆகியோர் கலந்து கொண்டனர்.