--> -->

இலங்கை அனைத்து இனங்களும் சுமூகமாக வாழும் பாதுகாப்பான ஒரு நாடாக மிளிரும் - பாதுகாப்புச் செயலாளர்

ஜூன் 16, 2020

  •     சிறைச்சாலைகளிலிருந்து செயல்படும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக வலைப்பின்னல்களை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிப்பு
  •     நாட்டின் சகல பிரஜைகளும் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய  சமூக நிலைமை  சாத்தியமாகும் எனவும் தெரிவிப்பு

எதிர்காலத்தில் சகல சமூகங்களும் பாதுகாப்பான  வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில்  போதைப் பொருட்கள், பாதாள உலக நடவடிக்கைகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பணம் கொள்ளை கள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன உறுதியளித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சில் இன்று   இடம்பெற்றது. இதன்போது பாதுகாப்புச் செயலாளர்,  பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளுக்குஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர்களது  வலைப்பிண்ணல்கள் முடக்கப்பட்டு அவர்களது செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க  ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாம் சிறைச்சாலைகளிலிருந்து மொபைல் போன்களைப் பயன்படுத்தி செயற்படுத்தப்படும் போதைப்பொருள் கடத்தல், கப்பம் கோருதல் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகள் முடக்க அனைத்துவகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இத்தகைய சட்டவிரோத தகவல் தொடர்பு வலையமைப்புகளை கண்டறிய அனைத்து தொழில்நுட்ப ரீதியிலான  நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற தனது முதலாவது உத்தியோகபூர்வ செய்தியாளர் சந்திப்பில் மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.  

சிறைச்சாலைகளில் இருந்து அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றபோதைபொருள் கடத்தல்   மற்றும் குற்றவிசாரணைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான  சவால்கள் மற்றும் இரண்டு ஜனாதிபதி செயலணிகள்  உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் ஆகியன தொடர்பாக  அவர் விளக்கமளித்தார்.

சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும்  மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஒரு படிப்படியான செயல்முறையாகும். நாம் ஏற்படுத்த விரும்பும் மாற்றங்கள் ஓரிரு நாட்களில் இடம்பெறுபவையல்ல.  சிறைச்சாலைகளில் இருந்து செயற்படும் போதைப்பொருள் மற்றும் குற்ற வலையமைப்புக்களை முடக்குவது தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். குறைந்த நாட்களில், இந்த மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதை நாம் கண்டுள்ளோம்" என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் நல்ல அதிகாரிகள்  உள்ளதைபோல ஒரு சில மோசமான அதிகாரிகளும் உள்ளனர். இவர்களின் ஆதரவில்லாமல் தொலைபேசி உள்ளிட்ட விடயங்கள் சிறைச்சாலைக்குள் செல்வதற்கு இடமில்லை. எனவே, அவ்வாறான அதிகாரிகளை நாங்கள் இனங்கண்டுள்ளோம். இவ்வாறான நிலைமையை கருத்தில் கொண்டு அண்மையில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய ஆணையாளரின் நியமனத்துடன், அண்மையில் பூச சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அதிகளவிலான அலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

“இந்த நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் போதைபொருள் கடத்தல் காரர்கள் மற்றும் பாதாள உலக குற்றவாளிகளின் சரணாலயங்களாக மாறியுள்ளன  என்பது அனைவரும் அறிந்த உண்மை " என அவர்  தெரிவித்தார்.

பாரியளவு போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய பாரியளவிலான குற்றங்களை சிறைச்சாலைகளில் இருந்து செயற்படுத்தி வரும் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவர்களுக்கு எதிரான நடவடிக்கக்கைகளை புலனாய்வு அமைப்புக்கள், விசேட அதிரடிப்படை மற்றும் நீதியமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து  முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் உள்ள முறைகேடுகளை சீர்செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், தற்போதுள்ள சிறைச்சாலை முறைமையில் உள்ள  குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த முரண்பாடுகளுக்கான  இறுதி தீர்வினைக் காண பாதுகாப்பு அமைச்சு ஒரு முக்கிய பங்குதாரராக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.சிறைச்சாலை மறுசீரமைப்பின் சாத்தியம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் குணரத்ன, இவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள உகந்த நேரம் இதுவாகும் என தெரிவித்தார்.

கடந்த ஏழு மாதங்களில், பொலிஸ் மற்றும் கடற்படை இணைந்து 1,300 கிலோ கிராம் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் சகல பிரஜைகளுக்கும் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய  சமூக நிலைமை  சாத்தியமாகும் எனவும் குறிப்பிட்டார்.

 இலங்கை கடற்படையுடன் ஆழ்கடல்  பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைமற்றும் விசேட கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த ஏழு மாதங்களில் 1200கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.

மேலும், இந்த நேரத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, பாரியளவிலான கடத்தல் முயற்சி உட்பட 25,000 போதை பொருள் கடத்தல் தொடர்பான 25,000 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில்,  பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவல மற்றும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன ஆகியோர் கலந்து கொண்டனர்.