--> -->

இலங்கையின் 13 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு

ஆகஸ்ட் 09, 2020

 

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை களணி ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வைபவத்தின்போது, இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நான்காவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், நாட்டின் அரசியல் வரலாற்றில் இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிவகித்த முதலாவது பிரதமர் ஆவார்.

மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்தை தொடர்ந்து சுபவேளையில் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பிபி ஜெயசுந்தரவின் முன்னிலையில் இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பிரதமராக அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் அதிகப்படுத்தி போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக அதிகூடிய விருப்பு வாக்குகளைப் கொண்டமை குறிப்பிடத்தக்கது.