சேதமடைந்த கப்பல் தொடர்பில் கடல்சார் பங்குதாரர்கள் தமது கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

செப்டம்பர் 14, 2020

சேதமடைந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் தொடர்பாக தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து கடல்சார் பங்குதாரர்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக இன்று (14) இடம்பெற்ற கடல்சார் பங்குதாரர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின்  (MEPA) தலைவி தர்ஷனி  லஹந்தபுர தெரிவித்தார்.

தீயினை அணைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட செலவுகளை கோருவதற்கான வழிகள் கோரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையின் நீர் நிலைகளில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் எதுவும் தென் படவில்லை என  லஹந்தபுர உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, சேதமடைந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் மட்டக்களப்பில் இருந்து சுமார் 59 கடல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்