--> -->

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

மே 21, 2019

இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் திரு. டொஷிஹிரோ கிடமுற அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (மே, 21 ) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஜப்பானிய பிரதித் தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சினது இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் டீஜே கொடிதுவக்கு அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.