--> -->

பாதுகாப்புச் செயலாருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

ஒக்டோபர் 05, 2020

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு,  இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிற்கு இன்று (ஒக்டோபர், 05) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வினை தொடர்ந்து, இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர் குழுவினருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் சுமுக கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

பொப்பி மலர் தினம் என அறியப்படும் படைவீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வானது, முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்கு பற்றி உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறும் வகையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்படைவீரர்கள் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தினால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.