--> -->

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 09, 2020

இலங்கைக்கான  இந்திய பாதுகாப்பு ஆலோசகர்,  கெப்டன் விகாஷ் சூட், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஒக்டோபர்,09) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையில்  நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை  சுட்டிக்காட்டிய கெப்டன் விகாஷ், அண்மையில் நீயூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு “ஒபெரேசன்ஸ் சாகர் ஆரக்ஷா” நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக நிறைவுசெய்தமைக்கு தனது பாராட்டினையும் தெரிவித்தார்.

குறித்த பணியினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் வகையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இரு நாடுகளுக்கிடையேயான துரித செயற்பாடு மற்றும் தீவிர நடவடிக்கை காரணமாக  கடல்சார் கூட்டுறவின் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

கடல் வளங்கள், கடல்வாழ் இனங்கள், சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி வளங்களை  பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட கடற்படை ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது பாராட்டினார்.

இதேவேளை, மாற்றுத்திரனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்தியாவின் ஜெய்பூர் செயற்கை கால்கள் தயாரிப்பு  தொடர்பாக இலங்கைக்கு அறிமுகம் செய்வது தொடர்பில் கெப்டன் விகாஷ் இதன்போது கலந்துரையாடினார்.
 
மேலும் இங்கு இடம்பெற்ற சினேகபூர்வமான கலந்துரையாடலில்,  இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் குறித்து இரு உயர்மட்ட அதிகாரிகளினாளும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.