--> -->

இதுவரை மொத்தம் 373,534 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

ஒக்டோபர் 17, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 110 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,354 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை  ஆடைத் தொழிற்சாலையில்  அடையாளம் காணப்பட்ட  1,041 பேருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 860 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,901 ஆக அதிகரித்துள்ளது

இதுவரை மொத்தமாக 373, 534 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 7,675 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் உள்ள 86 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,415 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 53,395 பேர்,  படையினரால் கண்காணிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய இலங்கையர் ஐவர், சிகிச்சையின் பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.