--> -->

அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு அவசியமான உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஒக்டோபர் 24, 2020

வழமையான நன்கொடையாளர் என அறியப்படும் திருமதி. தனுஜா விஜேசிரி டயஸ், அவரது நண்பர்களுடன் இணைந்து யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் நன்கொடை பொருட்களை வழங்கியுள்ளனர்.

இந்த நன்கொடை நிதி உதவிகள் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைய வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையாளர்கள், பாதுகாப்பு அமைச்சு, சீனத் தூதரகம் மற்றும் ஹூவாவி தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து வழக்கமாக ரணவிரு சேவா அதிகார சபையின் படைவீரர்கள் பராமரிப்பு மற்றும் புணர்வாழ்வு பிரிவின் அங்கவீனமுற்ற வீரர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக நன்கொடை அளித்து வருவதாக ரணவிரு சேவா அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, ரூ. 20 மில்லியன் பெறுமதியான 153 செயற்கை கால்கள், 02 மின்னணு தானியங்கி புரோஸ்டெடிக் கைகள், 02 இயல்பான புரோஸ்டெடிக் கைகள், 60 சாதாரண சக்கர நாற்காலிகள், 65 விஷேட சக்கர நாற்காலிகள், 250 ஊன்றுகோல், 15 ஜோடி ஊன்று கோல்கள்,  20 மருத்துவ காலணிகள், 30 வெள்ளை பிரம்புகள், 120 மூக்குக் கண்ணாடிகள், 13 கேட்டல் உபாகரணங்கள்  மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான போர் வீரர்களின் பிள்ளைகளுக்கு  02 மடிக்கணினிகள்  என்பன யுத்த வீரர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல்  வான் டாங், பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வாங், வரையறுக்கப்பட்ட லங்கா ஹூவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லியங் யி, அந்நிறுவனத்தின் பிரதி தலைமை நிர்வாக அதிகாரி ரிகார்டோ சியாவோ ஆகியோர் நன்கொடைகளை வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் வரையறுக்கப்பட்டு லங்கா ஹூவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர், ரணவிரு சேவா அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.