--> -->

அச்சம் அடைவதற்கோ பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கோ அவசியம் இல்லை - இராணுவத் தளபதி

ஒக்டோபர் 29, 2020

பொதுமக்கள் அனாவசியமாக பீதியடைவதற்கான அல்லது  பொருட்களை பொருட்களை கொள்வனவு செய்வது களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான ஒரு அவசியமும் கிடையாது எனவும் வைரஸ் பரவலைத் தடுக்க நெரிசலான கூட்டங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும்  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில்  கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் நவம்பர் மாதம் 2ம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச்  சட்டம் அமுல்படுத்தப்பட  உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாகாணத்தை தாண்டி எவரும் பயணிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகளில் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் எதிர்வரும் திங்கட் கிழமை தளர்த்தப்படாது எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களின் கடமைகளுக்காக செல்ல அனுமதிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.