--> -->

தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதிமொழி

ஒக்டோபர் 29, 2020

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நீண்ட காலம் சேவையாற்றியவர் என்ற வகையில் அங்கு பௌத்த மத வழிபாட்டுக்கான புனித தலங்கள் அழிவடைந்து செல்வதை நான் கண்கூடாக கண்டுள்ளேன் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய தொல்பொருள் மதிப்புள்ள புனித இடங்களை பாதுகாப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆர்வமாக இருப்பதன் காரணமாக அழிவடைந்துள்ள அத் தளங்களை பாதுகாத்து மீண்டும் அவற்றை அதே மகிமையுடன் புணர் நிர்மானம் செய்ய மாதாந்த கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவராகத்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறித்து தெரிவித்த அவர்,  " நாம் வண. மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலுக்கு அமைய எமது தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாத்து அவற்றை மீள் நிர்மாணம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்"  எனக் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின்  கருத்திட்டத்தின் கீழ் போர் வீரர்களின் ஞாபகார்த்தமாக அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மகா தூபி தொடர்பாக தெரிவித்த அவர், "பக்தர்களுக்காக நாம் தீகவாபி தூபியினை புனர்நிர்மாணம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்" என குறிப்பிட்டார்.

இதேபோன்ற மற்றும் ஒரு செயற்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், முஹுது மகா விஹாரைக்கு சொந்தமான நிலங்களை மீண்டும் பெறுவதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்ற லஹுகல நீலகிரி தூபியின் மயில் மீள்கட்டுமான பணிகளும் ஒருங்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவமிக்க பிரதேசங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
பெல்லன்வில ராஜ மஹா விஹாரையில்  புத்த பகவானின் உருவச் சிலையை திறந்து வைப்பதற்காக இன்று (ஒக்டோபர். 29) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த சிலை யாழ்ப்பாணம், பலாலியில் அமைந்துள்ள திஸ்ஸ ரஜமஹா விஹாரையின் வணக்க வழிபாடுகளுக்காக  நிறுவப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் மகா விகாராதிபதி வண. கலாநிதி. பெல்லன்வில தம்மரத்ன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) தர்ஷன ஹெட்டியாரச்சி, யாழ் பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.