--> -->

புதிய விமானப் படைத்தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 04, 2020

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 04) சந்தித்தார்.

ஏயார் சீப் மர்ஷல் சுமங்கள டயஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட விமானப் படைத் தளபதி வெற்றிடத்திற்கே எயார் மார்ஷல் பத்திரன நியமிக்கப்பட்டார். இவர் இலங்கை விமானப் படையின் 18வது தளபதி ஆவார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் புதிய விமானப்படை தளபதி ஆகியோரின் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஏயார் மார்ஷல் பத்திரன, 1985ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் 14வது பயிலுனர் அதிகாரி ஆட்சேர்ப்பின் போது விமானப் படையில் இணைந்து கொண்டார். இவர் ஆரம்பகட்ட களமுனை பயிற்சிகளை தியத்தலாவை விமானப்படை பயிற்சித் தளத்தில் பூர்த்தி செய்தார்.


சூப்பர்சோனிக் விமான பயிற்சி பெற்ற முதல் குழு விமானிகளில் ஒருவரான இவர் 5ம் மற்றும் 10ம் தாக்குதல் விமானப்படை பிரிவுக்கு கட்டளை வழங்கியுள்ளார்.

மேலும் எயார் மார்ஷல் பாத்திரன, பங்களாதேஷில் உள்ள கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில கனிஷ்ட கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரி பாடநெறியை பூர்த்தி செய்தார்.

அத்துடன் அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் நடவடிக்கை கலை மற்றும் அறிவியல் பாடநெறியில் முதுமானி பட்டம் பெற்ற இலங்கையின் முதலாவது விமானப்படை அதிகாரி இவராவார்.

இவர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கற்கைகள் தொடர்பான முகாமைத்துவ பாடநெறியில் முதுமானி பட்டத்தில் அதிவிசேட சித்தியை தனதாக்கிக் கொண்டார்.

பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான என்டீசி கற்கை நெறியை சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இவர் 2012ஆம் ஆண்டு முதுகலை பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இலங்கை விமானப் படையில் அவரின் உயரிய சேவைகளுக்காக விசிஷ்ட சேவா விபூஷணய, உத்தம சேவா பதக்கம், வீர விக்ரம விபூஷணய (இரு முறை), ரணவிக்ரம பதக்கம் (இரு முறை), ரண சூர பதக்கம் (நான்கு முறை)ஆகிய பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவர் விமானப் படைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னாள் விமானப்படையின் பிரதம அதிகாரியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.