--> -->

நாட்டின் சகல வீடுகளுக்கும் மருத்துவ மாதும் பொது சுகாதார அதிகாரியும் உள்ளமை அதிஷ்டமாகும் - பாதுகாப்புச் செயலாளர்

டிசம்பர் 19, 2020
  • பொது சுகாதார அதிகாரயின் முக்கியத்துவம் நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.
  • தனி நபர்களின் பொறுப்புக்கூறல் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பிரதானமாகும்
  • நாட்டின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஆற்றிவரும் சேவைகள் மிகவும் பயனுள்ளதும் பெருமதியானதுமாகும்.
  • சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் ஒருமைப்பாடு பயனுள்ளது.
  • தொற்றுக்கு எதிராக போராட்டத்தில் பொறுப்புடன் செயல்படவும்

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு மருத்துவமாதும் பொது சுகாதார அதிகாரியும் உள்ளமை இலங்கையர்கள் என்ற வகையில் நாங்கள் அதிஷ்டசாலிகள் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன (ஓய்வு) தெரிவித்தார்.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் முழு செயற்பாடுகளின் போது அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்புகளும்  செயற்பாடுகளும் பாராட்டுக்குறியது.

பொது சுகாதார அதிகாரிகளின் முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டது இதுவே முதற் தடவையாகும் என்றார்.

சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ஆற்றிவரும் பங்களிப்புக்களை விஷேடமாக பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு மருத்துவர்களும் சுகாதார அமைச்சின் பணியாளர்களும் விணைத்திறனான ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்றின் 2ஆவது அலை தொடர்பில் கவனம் செலுத்திய அவர், இந்த தொற்றை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதற்கு 'தனிநபர் பொறுப்புக்கூறல்' மிகவும் முக்கிய விடயமாகும் எனவே, மக்களை பொறுப்புடன் செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கொவிட் - 19 தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான விளக்கம் டிசம்பர் 18ஆம் திகதி கெடென் அதிகாரிகளினால் சமர்பிக்கப்பட்டது.

இதன் போது ஆய்வை மேற்கொண்ட கெடெட் அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ கலாசாலையின் பணியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கொவிட் தொற்றை எதிர்த்து போராட அரசாங்கம் முன்னெடுத்து வரும் வழிமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

கொவிட்-19 தொற்றானது உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாடடிற்குள் வைத்துள்ளது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. இந்த தொற்றுக்கு முன்னால் பாரிய சக்திகள் கூட மண்டியிட்டுள்ள நிலையில் இதன் முதல் அலையை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொண்டதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு படுத்த விரும்புகின்றேன் என்றார்.

இந்த தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக ஆரம்பக்கட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.