--> -->

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனவரி 15, 2021

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ரியர் அட்மிரல் (ஓய்வு) கலாநிதி. சரத் வீரசேகரவிடமிருந்து மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர தனது நியமனக் கடிதத்தை ஜனவரி 13ம் திகதி பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.