--> -->

காலி முகத்திடல் விற்பனை நிலையங்களின் புனரமைப்புப் பணிகளை கடற்படை கையேற்பு

பெப்ரவரி 09, 2021
  • காட்சியமைப்பை வசீகர தன்மையுடன்  அமைக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

காலி முகத்திடலில் நிறுவப்பட்டுள்ள விற்பனை நிலையங்களை  நவீனமயமாக்கும்  புதிய செயற்திட்டத்தை கடற்படை நேற்றய தினம் பொறுப்பேற்றுக் கொண்டது. குறித்த இந்த செயற்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய  காலி முகத்திடலின் வசீகர காட்சியமைப்பை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில்  நிரந்தர விற்பனை கூடங்களை நிர்மாணிக்கப்படவுள்ளதாக கடற்படையின் சிவில் நிர்மாணத்துறை பொறியியலாளர் திட்டமிடல் பிரிவின் பிரதி பணிப்பாளர் கொமடோர் ரஞ்சனி சந்திரசேகர தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு கடற்படையின் திறமையான மனித வலு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பயன்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு  என்று கொமோடோர் சந்திரசேகரதெரிவித்தார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்ன, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு) மற்றும் பல அரச அதிகாரிகள் இந்த திட்டம் தொடர்பாக  ஆய்வு செய்தனர்.

காலி முகத்திடலின் வசீகர காட்சியமைப்பை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் நிரந்தர விற்பனை கூடங்களை நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த முன்னெடுப்பு, காலி முகத்திடலின் அபிவிருத்தித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும்  என கொமோடொர் சந்திரசேகர மேலும் தெரிவித்தார்.