செய்தி   செய்தி

தீகவாபிய அருண' நிதி திரட்டும் திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு

பெப்ரவரி 12, 2021
  •         உத்தியோகபூர்வ இணையத்தளமான அங்குரார்ப்பணம்
  •        ‘QR’ code உழனந மூலம் நிதி பரிமாற்றத்திற்கான வசதி

தீகவாபி தூபி மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதி திரட்டும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் இன்று (பெப்ரவரி,12) நடைபெற்றது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் விஷேட அதிதியாக பிரதமரும், புத்தசாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் கலந்துகொண்டார்.

நிதி திரட்டும் திட்டத்துடன் இணைந்ததாக தீகவாபி தூபி மறுசீரமைப்பு பணிகளுக்கான  உத்தியோகபூர்வ இணையத்தளம் 'www.deegawapiya.lk' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்த நிதி திரட்டும் திட்டத்தின் ஊடாக தீகவாபி தூபி புனரமைப்பு செயன்முறைக்கு தேவையான நிதி திரட்டப்பட்டு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் 'தீகவாபிய நம்பிக்கை நிதியத்தின் கீழ் நிர்வகிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு  செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள  தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான  ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வழிகாட்டலின் கீழ் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தீகவாபி தூபி புனரமைப்பு செயன்முறைக்காக இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புரவலர்கள் மற்றும் பக்தர்களும் தமது பெறுமதிமிக்க பங்களிப்பை  ‘QR’ code மூலம் நிதி பரிமாற்றம் மற்றும் வைப்பு செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

தீகவாபி பௌத்த விகாரை, கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகவும் பௌத்த மதத்தில் குறிப்பிடப்படும் பதினாறு புனித வழிபாட்டு தலங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது.

நீண்ட காலமாக கவனம் செலுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தமையைக் கண்ட மகாஓய சோபித்த தேரர், தீகவாபி தூபியின் புனரமைப்பு செயன்முறை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கமைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில், அனைத்து ஆர்வலர்களின் ஆசியுடன், மூன்று வருடங்களுக்குள் இந்த தளத்தின்  புனரமைப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு  பக்தர்களுக்கு வழிபாட்டிற்காக கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் இங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

தீகவாபி தூபி புனரமைப்பு செயற்பாட்டிற்காக பாரிய நிதியுதவி வழங்கப்பட்டத்துடன், மகா சங்கத்தினர், முப்படைகள், பொலிஸ், அரச மற்றும் தனியார் துறைசார்பில் வழங்கப்பட்ட நிதியுதவிக்கான காசோலைகள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அஸ்கிரிய பீடத்தின் துணை பீடாதிபதி அதி வண. வென்டறுவே உபாலி தேரரின் ஆசிர்வாதத்துடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

பெற்றன. ஜனாதிபதி செயலணியின் செயலாளரான ஜீவன்தி சேனாநாயக்க இதன் போது நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், தொல்பொருளியல் சக்கரவர்த்தி, வண. எல்லாவல மேதனந்த தேரர்,  பௌத்த தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் வண. பெல்பொல விபஸ்ஸி தேரர், தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி பொரலந்த வஜிரகன தேரர், வண. மகாஓய சோபித்த தேரர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (ஓய்வு), தேசிய மரபுரிமைகள், கிராமிய கலைகள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அட்மிரல் ஒப் த பிளீட் வஸந்த கரன்னாகொட, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), புத்த சாசன மத, கலாசார அலுவல்கள அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்சன பத்திரண, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு), லங்கா சதொச நிறுவனத்தின்  தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் (ஓய்வு), தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, காணி ஆணையாளர் நாயகம் சந்தன ஹேரத், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், அதிதிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.