--> -->

பெல்லன்வில விஹாரை 'அரச மர எல்லை பகுதி'யின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

பெப்ரவரி 13, 2021

பெல்லன்வில விஹாரையில் 'அரச மர எல்லை பகுதி' (போதிகர) அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கெளரவ பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்னவும் (ஓய்வு) இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல் நட்டிவைத்தார்.

'அரச மர எல்லை பகுதி' (போதிகர) பண்டைய பௌத்த கட்டிடக்கலையில் ஒரு பிரபலமான கலைப்படைப்பு ஆகும்.

புனித பெல்லன்வில ரஜமஹா விஹாரை இலங்கையில் மிகப் புகழ்பெற்ற பௌத்த விஹாரைகளில் ஒன்றாகும். இது அனுராதபுர கால வரலாற்றுடன் தொடர்புடைய அநுராதபுரத்தில் அமைந்திருக்கும் புனித 'ஜெய மகா போதியின்' முப்பத்தி இரண்டு வெளிப்புற மொட்டுகளில் ஒன்றாகும் என கருதப்படுகிறது.

இந்த நிகழ்வில் பேராசிரியர் கொட்டபிடிய ராஹுல அனுனாயக தேரர், பெல்லன்வில ரஜமஹா விஹாரையின் பிரதம விஹாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரத்ன நயாக தேரர், அபயராம விஹாரையின் பிரதம விஹாராதிபதி முருத்தெட்டு வ ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்கள், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.