--> -->

ரணவிரு சேவா அதிகாரசபைக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

ஏப்ரல் 09, 2021

போர் வீரர்களுக்கு பாதுகாப்பு போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். ரணவிரு சேவா அதிகாரசபைக்கு இன்றைய தினம் மேற்கொண்ட விஜயத்தின் போது ரணவிரு சேவா அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார.

போர்வீரர்களின் குடும்பங்களைக் கவனிப்பதில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புக்கள் தொடர்பாக குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், அவைகள் தொடர்பான விடயங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ரணவிரு சேவா அதிகாரசபை உறுப்பினர்களின் சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவி சோனியா கோட்டேகொட, ரணவிரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன மற்றும் முப்படைகளை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.