--> -->

ஹார்ட் டு ஹார்ட் நிதியத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 20, 2019

ஹார்ட் டு ஹார்ட் நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஆகஸ்ட், 19 ) இடம்பெற்ற இச்சந்திப்பில் ஹார்ட் டு ஹார்ட் நிதியத்தின் பிரதிநிதிகள் தமது நிதியத்தின் செயல்பாடுகளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையுடன் ஒருங்கிணைக்கும் முன்மொழிவு திட்டத்தினை கையளித்தனர்.

ஹார்ட் டு ஹார்ட் நிதியம், இருதய அறுவை சிகிச்சை அல்லது அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகளுக்கு உட்படுத்த நிதி உதவி தேவைப்படும் இருதய நோயாளிகளுக்கு உதவுவதற்காக 2014 ஆண்டில் உருவானது. இந்நிதியத்தின் மூலம் இதுவரை 210 நோயாளிகளின் அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து அறுவை சிகிச்சைகளும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும் இந்நிதியம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு சாத்தியமான மற்றுமொரு இடமாக முன்மொழிகிறது. இது ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக காத்திருக்கும் காத்திருப்பு பட்டியல்களை குறைக்க வழிவகுப்பதுடன் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் படைவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் எதிர்பார்க்கிறது.

இந்நிகழ்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி கொட்டகதெனிய, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி. சரத் அமுனுகம, பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இணை பணிப்பாளர்களான கலாநிதி. ருவன் ஏக்கநாயக்க மற்றும் கலாநிதி. ராஜித வை டி சில்வா உள்ளிட்ட ஹார்ட் டு ஹார்ட் நிதியத்தின் அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.