--> -->

சேவா வனிதா பிரிவு தலைவி தலைமையில் 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு

செப்டம்பர் 10, 2019

முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'உதாரய் ஒப' இசை நிகழ்வு தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி. சாந்தினி கோட்டேகொட தலைமையில் இன்று (செப்டம்பர், 10) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் சேவா வனிதா பிரிவின் தலைவி, படைவீரர்களால் நாட்டிற்கு அளிக்கப்பட்ட தன்னலமற்ற சேவைகள் தொடர்பாக குறிப்பிட்டதுடன் இதற்கான நன்றிக்கடன் செலுத்தும் ஒரு வழியாக , படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக காலி மாநகரின் பூச பிரதேசத்தில் தொழிற்பயிற்சி மையத்தை நிறுவும் திட்டம் முன்னெடுக்ககப்பட்டதாக தெரிவித்தார். இத்திட்டத்திற்கு நிதி திரட்டும் நிகழ்வாக இந்த மாதம் 14 ஆம் திகதி (செப்டம்பர், 2019) தாமரைத் தடாக அரங்கில் இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர் இந்த நிகழ்வைக் காண டிக்கெட் வாங்குவதன் மூலம் இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற பொது மக்கள் தங்கள் முழு ஆதரவையும் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டனர்.

முன்மொழியப்பட்ட தொழிற்பயிற்சி மையம், விருந்தோம்பல் முகாமைத்துவம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தொழில்முறை பயிற்சியை வழங்கவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சோனியா கோட்டேகொட அவர்களின் கருத்திதடத்தின் கீழ் இக்குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப் படுகின்றது.

முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றின் சேவா வனிதா பிரிவுகளின் தலைவிகள் மற்றும் முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு பாதுகாப்பு படை பிரதிநிதிகள், முப்படைகளின் ஊடக பேச்சாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்கான நுளைவுச் சீட்டுக்களை www.mytickets.lk எனும் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ள முடியும்