--> -->

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சி நெறிக்கான மையம்

ஒக்டோபர் 05, 2019

“கேடீயூ” என பலராலும் அறியப்பட்ட  இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வருடாந்த பயிற்சி நெறிக்கான மையம்  “ஓபன் டே” நிகழ்வு நாளை (ஒக்டோபர், 06) இடம்பெற உள்ளது.  குறித்த நிகழ்வானது இங்கு உயர் கல்வியை தொடர எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு, பயிற்சிநெறி தொடர்பான தகவல்கள், புலமைப்பரிசில்கள், மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும்  வசதி வாய்ப்புக்கள் தொடர்பான விடயங்களை வழங்கும் நோக்கில் இடம்பெறுகின்றது.

உயர்கல்வியை பெற விரும்பும் எந்தவொரு மாணவரும் ஞாயிற்றுக்கிழமை (06) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இங்கு வருகை தந்து  இப் பல்கலைக்கழகம் தொடர்பான விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் எதிர்கால மாணவர்களுக்கு உதவும் வகையில்  அன்றைய தினம் வருகை தரும் கல்வி நிருவாக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள முடியும்.

இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழகமானது 1981ஆண்டின் பாராளுமன்ற சட்டத்தின் 68ஆம் இலக்கத்தின் பிரகாரம் “ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டு பின்னர்  1988 ஆண்டின் பாராளுமன்ற சட்டத்தின் 27ஆம் இலக்கத்தின் பிரகாரம் பல்கலைக்கழக தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டது. இதன் பிரகாரம் பாதுகாப்பு கற்கைகளில் இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களை வழங்குவதற்கு  உறுதுணையாக அமைந்துள்ளது. பொதுநலவாய பல்கலைக் கழகங்கள் (அமெரிக்கா) சங்கத்தின் அங்கத்துவம் பெற்றுள்ள இப்பல்கலைக்கழகம், அதன் கல்வித்தரத்தினை நிலைநாட்டும் வகையில் கடட் அதிகாரிகளுக்கு நவீன பாதுகாப்பு முகாமைத்துவத்தில் எதிகொள்ளும் சவால்களை முகம் கொடுக்கும் வகையிலான தரமான கல்வியினை வழங்குகிறது.

மேலும், இப்பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள், பொறியியல், சட்டம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மருத்துவம், கணினி, உடற்கல்வி, கட்டப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் இடஞ்சார்ந்த விஞ்ஞானம், ஆராய்ச்சி  மற்றும் அபிவிருத்தி போன்ற துறைகளில் உயர் கல்வியை தொடர விரும்பும் சிவில் மாணவர்களுக்கும் வசதிகளை வழங்குகிறது.

சூரியவெவயில் உள்ள அதன் தெற்கு வளாகமானது  தெற்கு பிராந்தியத்தில் இயற்கையான சூழலில் அமைக்கப்பட்ட ஒரு மேலதிக புதிய பல்கலைக்கழகமாகும்.
இப்பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களுக்கும் கல்வி கற்கும் வசதிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.