காலி கலுவெல்ல புனித மரியாள் தேவாலய வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை கடற்படையினர் உதவி

ஒக்டோபர் 07, 2019

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் உத்தரவின் பேரில் தெற்கு பிராந்திய கடற்படைப் தளபதியின் மேற்பார்வையுடன், காலியில் உள்ள கலுவெல்ல புனித மரியாள் தேவாலய வருடாந்த திருவிழா தெற்கு கடற்படை கட்டளையக கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 05 ) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தேவாலய பாதிரியார் மற்றும் பக்தர்கள் ஆகியோர் புனித மரியாள் தேவாலய வருடாந்த திருவிழாவிற்கு இலங்கை கடற்படையினால் வழங்ப்பட்ட   ஒத்துழைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.