நீர் பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வு

நவம்பர் 06, 2019

அண்மையில்  (ஒக்டோபர் 18) இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் தெஹிவளை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு நீர் பாதுகாப்பு தொடர்பான மற்றுமொரு விழிப்பூட்டல் நிகழ்வொன்றினை  முன்னெடுத்துள்ளனர். குறித்த விழிப்பூட்டல் நிகழ்வானது ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட  'ரட்ட வெனுவென் எக்கட சிட்டிமு'  (நாட்டுக்காக ஒன்றிணைவோம் ) எனும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாக  இலங்கை கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் 100க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.   “ரட்ட வெனுவென் எக்கட சிட்டிமு'   எனும் இத் தேசிய திட்டத்தின் கீழ் கடலோர பாதுகாப்பு படையினரால் நடாத்தப்பட்ட ஐந்தாவது நீர் பாதுகாப்பு விழிப்பூட்டல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.