--> -->

பாதுகாப்பு செயலாளர் அவரது முன்னால் படைப்பிரிவினால் கௌரவிப்பு

ஜூலை 27, 2019

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் அவரது முன்னாள் படைப்பிரிவான இலங்கை இலேசாயூத காலாட்படைப்பிரிவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு பனாகொட படைப்பிரிவு தலைமையகக்த்தில் இன்று (ஜூலை, 27) இடம்பெற்றுள்ளது.

தலைமையகத்திற்கு வருகைதந்த செயலாளர் அவர்கள் படைப்பிரிவின் கேர்ணல் மேஜர் ஜெனரல், எல்எம் முதலிகே அவர்களால் வரவேற்கப்பட்டதுடன், செயலாளர் அவர்களுக்கு அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ஆகியோரால் அணிவகுப்பு மரியாதையொன்றும் அளிக்கப்பட்டது.

பின்னர் போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கு சென்ற செயலாளர் அவர்கள் உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களுக்கும் மரியாதை செலுத்தி மலர்வளையம் சாத்தினார்.

செயலாளர் அவர்கள் கேடட் அதிகாரியாக பயிற்சி முடித்த பின்னர் இலங்கை இலேசாயூத காலாட்படைப்பிரில் ஒரு அதிகாரியாக இணைந்துகொண்டார். அவரது 36 வருடகால மதிப்புமிக்க இராணுவ வாழ்க்கையில் பல்வேறு பாதுகாப்பு துறை சார்ந்த முக்கிய பதவிகளை வகித்ததுடன், 2004ஆம் ஆண்டு இலங்கை இராணுவ தளபதியாகவும் பதவி ஏற்றார். மேலும், ஒரு இராணுவ அதிகாரி என்ற வகையில் தனது இராணுவ வாழ்க்கையின்போது அவர் தனது படைப்பிரிவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். கேர்ணல் கொமடான் ஆகவும், பின்னர் படைப்பிரிவின் கேர்ணல் ஆகவும் இறுதியில் இராணுவத் தளபதியாகவும் பதவி வகித்த அவர், தனது படைப்பிரிவிற்கு பெருமையினை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இங்கு வருகைதந்த செயலாளர் அவர்களுக்கு வரண்ட் அதிகாரிகள் மற்றும் சாஜன்ட் ஆகியோரின் மெஸ்ஸில் தேனீர் விருந்தும் வழங்கப்பட்டது. இதன்போது அவர்களுடன் சுமூக கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.

பின்னர், அதிகாரிகளின் மெஸ்ஸில் மாலை இடம்பெற்ற இரவு விருந்துபசாரத்தில் செயலாளர் அவர்களுடன் இணைந்து திருமதி. சோனியா கோட்டேகொட அவர்களும் கலந்து சிறப்பித்தார். இதன்போது செயலாளர் அவர்கள் இந்நிகழ்விற்கு வருகைதந்திருந்த படைப்பிரிவின் ஓய்வுபெற்ற மற்றும் சேவையிலுள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இவ்விருந்துபசாரத்தில், இலங்கை இலேசாயூத காலாட்படைப்பிரிவின் சேவா வனிதா தலைவி திருமதி. கிரிஷாணி முதலிகே, சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது துனைவியர்கள் ஆகியோர்ளும் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் இலேசாயுத படைப்பிரிவானது, தனது பிரிவில் ஒரு இளம் அதிகாரியாக இணைந்து பாதுகாப்பு ஸ்தாபனத்தின் உயரிய இடத்திற்கு வந்தடைந்த ஒருவருக்கு மிக உயர்ந்த பாராட்டு தெரிவித்தது. அவர் இப்படைபிரிவின் அனைத்து நியமனங்களையும் வகித்துள்ளார், இது இராணுவ அதிகாரியின் வாழ்நாளில் அரிய வாய்ப்பாகும். ஒரு விதிவிலக்கான அதிகாரியாக அவர் தனது படைப்பிரிவில் ரெஜிமென்ட்டின் கர்னல் ஆகவும் பின்னர் இராணுவ தளபதியாகவும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் படைவீரர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் பெரும் மாற்றங்களைச் செய்தார்.

பல ஆண்டுகளாக அவர் பெற்றுகொண்ட அறிவு, பயிற்சி மற்றும் அனுபவம் என்பன ஒரு தளபதியாக அவர் எடுத்த முடிவுகளில் ஒரு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் மூன்று தசாப்தங்களாக நாடு எதிர்கொண்ட பயங்கரவாதத்தினை விடுவிக்கும் இறுதி மனிதாபிமான நடவடிக்கைக்கு ஒரு உறுதியான அடித்தளத்தையும் வழங்கியது.

மேலும் அவர், பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற வேளை, உயிர்த்த ஞாயிறு படுகொலைக்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். அத்துடன் அவர், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளைக் காண அவர் விஷேட அக்கறை செலுத்தியுள்ளார். வெற்றிகரமான இராஜதந்திரியாக அவர் பணியாற்றிய ஆண்டுகளில் அவர் பெற்றுக்கொண்ட அனுபவமும் இறுக்கமான உறவுகளும் மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு பூரணத்துவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.