--> -->

இராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட க.பொ.தா. சாதாரன தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கில் அதிகளவான மாணவர்கள் பங்கேற்பு

நவம்பர் 16, 2019

இலங்கை இராணுவத்தினரால் இவ்வருடம்  (2019)  க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிளிநொச்சி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  இலவச  உதவிக் கருத்தரங்கில் அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டு நன்மையடைந்துள்ளனர்.  இவ்வருடம் க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக  இவ் இலவச  உதவிக் கருத்தரங்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டதாக  இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இக் கருத்தரங்குகள், நெலும் பியச கேட்போர்கூடம், பிரமந்தல் ஆறு வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி செயற்பாட்டு மையம் ஆகியவற்றில் இடம்பெற்றன. இதில்  நூற்றுக்கணக்கான  மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அத்துடன்  இலங்கை இராணுவத்தினரால் இக்கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கு  மாதிரி வினாத்தாள்கள்  மற்றும் கையேடுகள் என்பன இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த கருத்தரங்குகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு,  ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடப்பரப்புக்களில் அவர்களது அறிவினை மேம்படுத்தும் வகையில் விரிவுரைகள்  இடம்பெற்ற அதேவேளை,  படையினரால்  கருத்தரங்குகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் போக்குவரத்து என்பன வழங்கி வைக்கப்பட்டன.

 வட கிழக்கு பிராந்தியங்களில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களினால் இப்பிரதேச மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. விசேடமாக பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள  மாணவர்களுக்காகதேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு  இதுபோன்ற கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.