--> -->

பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 27, 2019

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய  அவர்கள் பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 27) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது  பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.