--> -->

சிவிலியன் ப்ரேவரி விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

ஜூலை 25, 2019

இவ்வருடத்திற்கான 25ஆவது தேசிய சிவிலியன் ப்ரேவரி விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஜூலை, 25) இடம்பெற்றது. சிவிலியன் ப்ரேவரி ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இவ்விஷேட வைபததில் சபாநாயகர் கௌரவ. கரு ஜயசூரிய அவர்கள் கலந்துசிரப்பித்தார். இந்நிகழ்வில் ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்ளும்போது அவர்களின் துணிகரமான செயல்களை பாராட்டி சிவிலியன்கள் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த வருடம் (2018) ஜூன் மாதம் தாய்லாந்து தாம் லுவாங் குகையில் சிக்கிய சிறுவர்கள் குழுவினரை காப்பாற்ற முயற்சியில் ஈடுபட்டு தனது உயிரை தியாகம்செய்த சமன் குனான் எனும் முன்னாள் கடற்படை சுழியோடியின் மனைவிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

2009ஆம் ஆண்டு 4ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின்கீழ் 1993ஆம் ஆண்டு சிவிலியன் ப்ரேவரி ஸ்ரீலங்கா அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பானது தமது உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரை காப்பதற்காக செயற்படும் சிவிலியன்களை பாராட்டும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அமைப்பாகும்.

இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ. மஹிந்த ராஜபக்ஸ, அமைப்பின் தலைவர், திரு. கசுன் சந்திரரத்ன, விஷேட அதிதிகள், முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.