--> -->

அமெரிக்க தூதுவர் டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 17, 2019

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர், 17) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர்  தலைமையிலான பிரதிநிதிகள்  மற்றும் பாதுகாப்பு செயலாளர்  ஆகியோரிடையே இரு தரப்பு முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பான  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.