போதை வஸ்து பாவனையிலிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – பாதுகாப்பு செயலாளர்

ஜனவரி 14, 2020

  • பல வருடகால தியாகங்களுக்குப் பின்னர் இலங்கை சமாதானத்தை அடைந்துள்ளதாக தெரிவிப்பு
  • போரின் போது ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்துள்ளதுடன், பலர்  காயமடைந்துள்ளனர்
  • பலரது வாழக்கை சக்கர நாற்காலிகள் மற்றும் கட்டில் படுக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

விசேடமாக அமைக்கப்பட்ட சட்ட அமுலாக்கள் பிரிவுகளின் உதவியுடன் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே போதைப்பொருள் அச்சுறுத்தல்களிலிருந்து  தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரட்ன பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.  

"இன்று நான் இங்கு ஒரு சிரேஷ்ட பெற்றோராக இருப்பதுடன், பொறுப்புள்ள பெற்றோர்களாக உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு உங்கள் அனைவருக்கும் ஆலோசனை வழங்குகிறேன்” என கொழும்பு பாதுகாப்பு கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்வில் குழுமியிருந்த பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடற்படையினர் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சுமார் 800 கிராம் ஐஸ் ரக போதைபொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த அவர், மேற்படி போதைபொருளானது குரைந்தளவாக காணப்பட்ட போதிலும் அவை போதைக்கு  அடிமையான சுமார் 15,000  நபர்களின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்  போதைப்பொருள் பாவனையை தடுக்குமாறு பெற்றோர்களிடமிருந்து அன்றாடம் தொலைபேசி அழைப்புக்கள் தனக்கு கிடைப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு இடம்பெற்ற பாதுகாப்பு கல்லூரியின் திறப்புவிழா நிகழ்வினை நினைவு கூர்ந்த மேஜர் ஜெனெரல் குணவர்த்தன, பாதுகாப்பு கல்லூரியைப்போன்ற சகல நவீன வசதிகளுடைய பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்புக்கள் புகழ்பெற்ற ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்குகூட கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, பாடசாலை அபிவிருத்தி மற்றும் அதன் நிருவாக நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவது     பெற்றோர்களாகிய உங்கள் கடமையாகும். இந்நாட்டில் உயர் தரம்வாய்ந்த வசதிகளுடன் கூடிய  சிறந்த பாடசாலையான இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்காக உருவாக்கப்பட்ட இக்கல்லூரி   கடந்த காலங்களில் சரியாக கவனம் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் அறிவு மற்றும் விளையாட்டு திறமைமைகளை மேம்படுத்த பெற்றோர்களாகிய உங்களது கடமை எனவும் தெரிவித்தார்.

இக்கலூரியின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டும் இதன்  அதிபர் மற்றும் பணிக்குலாம் ஆகியோரின் நிருவாகம் மற்றும் பௌதீக விடயங்களை சிறப்பாக முன்னெடுக்கும் பொருட்டு முதற்கட்ட நடவடிக்கையாக இதன் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் (ஒய்வு) வஜிர பலிகக்காரவை நியமித்துள்ளேன். எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு மனித பெறுமதி தொடர்பாக கற்றுக்கொடுப்பதுடன், கல்லூரியின் பராமரிப்பை சிறப்பாக மேற்கொள்ள முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டிக்கொண்டார்.

தனது உரையின்போது உயித்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், இதன் பாதிப்பில் பல பிள்ளைகள் காயப்பட்டு வாழ்நாள் பூராக அவஸ்தைப்படும் நிலைமைக்கு உள்ளக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்புச் செயலாளர் தனது கடந்த காலத்தை நினைவு கூர்ந்த அதேவேளை, பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூட்டங்கள் மற்றும் விளையாட்டுபோட்டிகள் தவிந்த தனது மகளின் கல்லூரித் தேவைகளுக்குச் செல்ல தனக்கு நேரம் இருக்கவில்லை என்பதாகவும் தெரிவித்தார்.

அன்பான பிள்ளைகளே,  உங்கள் பெற்றோரின் புகழால் உங்களை மற்றவர்கள் தெரிந்துகொள்வதை விட, உங்கள் சொந்த அடையாளத்தையும் ஆளுமையையும் சுயமாக நீங்களே நிலைநிறுத்த கடுமையாக முயற்சி செய்யுங்கள்,” என மாணவர்களிடத்தில் வேண்டிக்கொண்டார்.

ஆங்கிலம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய செயலாளர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமையை இக்கல்லூரிக்கு ஒரு மொழி கூடத்தையும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
 
“ஒரு சிறந்த ஆளுமையை வளர்ப்பதிலும், எதிர்காலத்தில் கண்டுபிடிப்புக்களில் அதிக வாய்ப்புகளை பெறக்கூடிய மிக முக்கியத்துவம் வாய்ந்த பாடநெறிகளை கற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உங்கள் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்குமாறும் கேட்டுக்கொண்ட அவர், இக்கல்லூரிக்கு ஒரு சிறந்த அதிபர்  இருப்பதாகவும் தெரிவித்தார்.  

இடைநடுவே நிறுத்தப்பட்ட  விடுதி நிர்மாணிப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதை உறுதியளித்த பாதுகாப்பு செயலாளர், விளையாட்டு மற்றும் கல்வித்துறைகளில் சிறந்த செயல்திறன்களை வெளிப்படுத்தி பரீட்சைகளில் சிறந்த முடிவுகளைப் பெற்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பாதுகாப்புக் கல்லூரி பெருமையுடன் திகழும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்