--> -->

மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

மார்ச் 23, 2020
  •    ஊரடங்கு சட்டம்  வெள்ளிக்கிழமை வரை தொடரும்

 கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம்  மாவட்டங்கள் மற்றும் வட மாகாண மாவட்டங்கள் அடங்களாக   நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான பயணத்தை தடைசெய்யும் வகையில் விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம்   நாளை (24) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு  அதேநாள்  மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. நாளையதினம் அமுல்படுத்தப்படும்  ஊரடங்கு சட்டம் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) காலை 6 மணி வரை தொடரும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் விதிப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம்  இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் என்றும் இது வியாழக்கிழமை (26) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.  அன்றையதினம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்  மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவலை தடுக்கும் வாகையில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளையும் விதிகளையும் மீறுவதைத் தடுக்க ஊரடங்கு சட்டத்தை  மீண்டும் அமுல்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர்  சி.டி. விக்ரமரத்ன  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள  நேரங்களில் விவசாய நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கப்பட்டபோதிலும், சுற்றுலாப் பயணிகளை இடத்திலிருந்து இடத்திற்கு கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  எனினும், அரிசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.