--> -->

பொருட்களை கொள்வனவு செய்யும் போது பெரும்பாலானோர் அரசின் ஆலோசனைகளை கடைப்பிடிப்பு

மார்ச் 24, 2020

கொடிய கொரோனா வைரஸிலிருந்து உயிர்களை காத்துக்கொள்ளும் தாரகை மந்திரமாக கருதப்படும் முகமூடி அணிதல் மற்றும் தனி நபர்களுக்கு இடையிலான இடைவெளியை பேனல் போன்ற சமூக நலன் சார்ந்த விடயங்களை பேணி நடப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும்.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் பொருட்களை கொள்வனவு செய்யும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த அறிவுரைகளை பொதுமக்கள் எவ்வாறு பின்பற்றினார்கள் என்பது தொடர்பாக எமது கேமராக்களில் பின் வரும் காட்சிகள் பதிவாகின.

பெரும்பாலான மக்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கேற்ப முகக் கவசங்கள் அணிந்து தனி நபர்களுக்கு இடையிலான தூரத்தை பேணி ஒழுக்கம் நிறைந்த பிரஜையாக சமூக பொறுப்புடன் செயற்பட்டனர். ஆனால் ஒரு சிலர் அவர்களையும் அவர்களிடமிருந்து ஏனையோரையும் பாதுகாத்துக் கொள்வதில் எதுவித அக்கறையும் காட்டவில்லை.

இது அனைவரும் இணைந்து வெற்றி கொள்ள வேண்டிய வைரசுக்கு எதிரான ஒரு போர் ஆகும். மாறாக தனி ஒருவரின் போர் அல்ல என்பதை அனைவரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுரைகளை பின்பற்றுவதில் அசிரத்தையாக செயற்படுவது வைரஸ் பரவலை மேலும் இலகுவாக்கும். இதனால் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தை விரட்டியடிப்பது சிரமமாக அமையும்.