--> -->

ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சேவையில் இணைந்துகொண்ட ஏ.என்-32 ரக விமானங்கள்

ஜூன் 16, 2021

கடந்த 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதி ரோயல் இலங்கை விமானப் படையாக ஆரம்பிக்கப்பட்ட விமானப் படையானது, இலங்கை குடியரசாக மாற்றப்பட்டது தொடக்கம் அதாவது 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி முதல் ‘இலங்கை விமானப் படை’ என்று பெயர் மாற்றம் பெற்று இன்று முதல் தாய்நாட்டிற்கான அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை ஆற்றி வருகின்றது. 06 அதிகாரிகள் மற்றும் 21 வீரர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப் படை தற்பொழுது 34 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பலமான அமைப்பாகக் காணப்படுகின்றது.
 
தற்போதைய விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன உட்பட 18 தளபதிகளின் வழிகாட்டலின் கீழ் இயங்கி வருகின்ற இலங்கை விமானப்படை கபீர், எப்-7 ரக அதிவேக தாக்குதல் ஜெட் விமானங்கள், என்-32, சீ-130, எம்ஏ-60 மற்றும் வை-12 ரக பயணிகள் விமானங்கள், பெல் 212, பெல் 412, எம்ஐ-17 மற்றும் எம்ஐ-24 ரக ஹெலிகொப்டர்கள் உட்பட பல்வேறு வகையான அதிநவீன வசதிகளைக் கொண்ட விமானப் படையாக பரிணமித்துள்ளது.
 
‘வானின் பாதுகாவலர்கள்’ என்ற தொனிப்பொருளில் இலங்கையின் வான் பரப்பின் பிரதான பாதுகாவலரான இலங்கை விமானப் படை சகல சந்தர்ப்பங்களிலும் நாட்டின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க முன்னின்று செயற்பட்டு வருவதுடன், பயங்கரவாதிகளிடமிருந்து தாய்நாட்டை மீட்டெடுக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவம் மற்றும் கடற்படையினர் முன்னேறிச் செல்ல வான்வழி ஒத்துழைப்பை வழங்கியமை அனைவரும் அறிந்த விடயமாகும். அத்துடன் உலகிலேயே விமான வசதிகளைக் கொண்டிருந்த பயங்கரவாத அமைப்பான எல்.ரி.ரி.ஈயை வெற்றிகரமாக முறியடித்த பெருமை இலங்கை விமானப் படையைச் சாரும்.
 
அன்டனோ (ஏஎன் - 32):
 
கடந்த மார்ச் மாதம் 02ஆம் திகதி தனது 70ஆவது ஆண்டு நிறைவை வெகுவிமரிசையாகக் கொண்டாடிய விமானப் படை தனது விமானப் பலத்தை அதிகரிக்கும் வகையில் 1995ஆம் ஆண்டு அன்டனோ (ஏஎன் - 32) ரக பாரிய போக்குவரத்து விமானத்தை விமானப் படைக்கு இணைத்துக் கொண்டது. 650 கிலோ எடையுடைய பொதிகளும், 55 பயணிகளையும் ஒரே தடவையில் எடுத்துச் செல்லக் கூடியது இவ்விமானம்.

அன்று தொடக்கம் நாட்டின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த விமானம் விஷேடமாக மனிதாபிமான நடவடிக்கையின் போது படைவீரர்களை களத்திற்கு கொண்டு செல்லல், விடுமுறையில் செல்லக் கூடியவர்களை அழைத்து வருதல், காயமடைந்த படைவீரர்களை அழைத்து வருதல், உயிரிழந்த படைவீரர்களின் சடலங்களை எடுத்து வருதல், பயணிகளை ஏற்றிச் செல்லல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் 2014 நவம்பர் மாதம் முதல் படிப்படியாக செயலிழந்த இந்த விமானம் இன்று வரையான 7 ஆண்டுகளாக தனது பயன்பாட்டை வழங்க முடியாமல் செயலிழந்து காணப்பட்டது. இதனால் விமானப் படையின் போக்குவரத்து பலம் 75 வீதத்தால் செயலிழந்து காணப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் அதனைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இந்த அடிப்படையில் 2020 ஓகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஏஎன் - 32 ரக மூன்று விமானங்களும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தன.
 
2021 ஜூன் மாதம் இரவு 8.15 மணியளவில் கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப் படைத் தளத்தை வந்தடைந்த மேற்படி மூன்று விமானங்களையும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்ன மற்றும் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேரில் வரவேற்றனர்.
 
விமானப் படையின் 2ஆவது ஸ்கொட்ரனின் கட்டளை அதிகாரியான குரூப் கெப்டன் பிரதீப் பியரட்ன தலைமையிலான 28 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மூன்று விமானங்களுடன் கடந்த 07ஆம் திகதி உக்ரைனிலுள்ள சுலியாணி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு துருக்கி, எகிப்து, சவுதி அரேபியாவின் ரியாத், மதீனா, ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியா ஏழு விமான நிலையங்களை ஊடறுத்து 5078 விமான மைல் தொலைவை தாண்டி 22 மணித்தியால பயணத்திற்குப் பின்னர் 2021 ஜூன் 11ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர்.
  
இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ன பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.  “இன்றைய நாள் பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை விமானப் படைக்கும் விஷேட நாளாகும். ஏனெனில் சுமார் ஏழு ஆண்டுகளாக செயலிழந்து பறக்க முடியாத நிலையில் இருந்த பாரிய பயணிகள் விமானமான ஏ.என் -32 ரக மூன்று விமானங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் நாட்டை வந்தடைந்துள்ளன.
 
யுத்த காலத்தில் பாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்த விமானமானது படைவீரர்களை களத்திற்கு கொண்டு செல்லல், அவர்கள் தங்களது குடும்பங்களை பார்வையிட விடுமுறையில் சென்றவர்களை அழைத்து வருதல், அதேபோன்று காயமடைந்த படைவீரர்களை அழைத்து வருதல், தாய்நாட்டிற்காக உயிரிழந்த படைவீரர்களின் சடலங்களை எடுத்து வருதல் போன்றை பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாரிய அளவில் பயன்படுத்தப்பட்டது.
 
சுமார் ஏழு ஆண்டுகளாக செயலிழந்து காணப்பட்ட இந்த விமானத்தை புதுப்பிக்க அல்லது பழுது பார்க்க முடியாத நிலை காணப்பட்டது. விமானப் படை என்றாலே விமானங்களை நிலத்தில் நிறுத்தி வைப்பதற்கு மாறாக அதன் விமானங்கள் வானில் பறக்க விட வேண்டும். ஆனால் பறக்க முடியாமலே இவை நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிபீடம் ஏறியதும் விமானப் படையை உண்மையான விமான பலமுள்ள படையாக தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு அமையவும் ‘வானின் பாதுகாவலர்கள்’ என்ற விமானப் படையின் நோக்கை அடையும் வகையிலும் இந்த விமானங்களை புதுப்பிக்க ஜனாதிபதி அனுமதி அளித்தார். இதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்து தந்தார்.
 
இதனையடுத்து அதனை புதுப்பிக்கும் பொருட்டு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இதன் பலனாக இன்று மூன்று விமானங்கள் எமக்கு மீண்டும் கிடைத்துள்ளமை பாரிய பலமாகும். எனவே தான் நான் கூறினேன் பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை விமானப் படைக்கும் விஷேட நாளாகும் என்று. ஏனெனில் ஒரே தடவையில் மூன்று விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் சந்தர்ப்பங்கள் இதற்கு முன்னர் எமக்கு கிடைத்திருக்கவில்லை.
 
எம்மைச் சுற்றியுள்ள கடல்பரப்பில் போதைப் பொருள் கடத்தல், கடல் கொள்ளையர்களின் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த விமானங்களை கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துவதன் மூலம் பாரிய நன்மைகளை அடையலாம்.
 
அதேபோன்று சுமார் 200 கிலோ மீற்றர் வரை எமக்கு சொந்தமான கடல் பிரதேசத்தை முழுமையாக கண்காணிக்க இந்த விமானத்தை பயன்படுத்த முடியும். அதே போன்று இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் பல்வேறு அனர்த்தங்களின் போது இது போன்ற விமானங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். அத்துடன் எமது நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்பங்களிலும் சரி, எமது நேச நாடுகளில் அனர்த்தங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்கிலும் சரி இதற்காக செயற்படும் படைவீரர்களை அழைத்துச் செல்ல, பொருட்களை கொண்டுச் செல்ல பயன்படுத்த முடியும்.

எனவே, எமது விமானப் படையின் பலம் பாரிய அளவில் அதிகரித்த நாள் என்பதால் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் மகிழ்சியடைகின்றேன். மூன்று விமானங்களும் ஒரே நேரத்தில் வந்து தரையிறங்கும் போது எமது மனதால் அதன் பெறுமதியை உணர்ந்து கொள்ள முடிந்தது. நாட்டு மக்களும் அதே உணர்வை அடைந்திருப்பார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
  
இதன் போது விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன கருத்து தெரிவிக்கையில் “இலங்கை விமானப் படையின் விமான போக்குவரத்து பலத்தை அதிகரிக்க வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஏழு ஆண்டுகள் செயலிழந்து காணப்பட்ட விமானங்களை ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதலாவது மற்றும் இரண்டாவது பராமரிக்கும் பணிகளை எம்மால் முன்னெடுக்கக் கூடிய வசதிகள் உள்ள போதிலும், அதன் பிரதான பழுது பார்த்தல் பணி இத்துறைசார் நிபுணர்களால் அல்லது இதன் உற்பத்தியாளர்களால் மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே உக்ரேன் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்படும் சகல நடவடிக்கைகளும் நிறைவுற்ற பின்னர் இலங்கையை வந்தடைந்துள்ளது.

மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இந்த விமானத்தை மீண்டும் வெற்றிகரமாக நாட்டுக்கு எடுத்து வந்த மேற்படி விமானங்களின் விமானிகளுக்கும் குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிறந்த அனுபவங்களைக் கொண்ட குழு எம்மிடம் இருப்பதையிட்டு விமானப்படைத் தளபதி என்ற வகையில் நான் பெருமிதம் அடைகின்றேன்.

இந்த விமானங்களை எமது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தும் அதேசமயம், விஷேடமாக இலங்கை கடற்படையினருடன் இணைந்து  கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தவும் இயற்கை அனர்த்தங்களின் போது தேவையான பொருட்கள், உபகரணங்களை எமது இந்த பிராந்தியத்திலுள்ள நேச நாடுகளிடமிருந்து வெகுவரைவில் கொண்டு வரவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எமது நாட்டு மக்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவர்களுக்கு தேவையானதை துரிதமாக பெற்றுக் கொடுக்கவும் முடியும்.

நாடுகளுக்கிடையில் காணப்படும் சிறந்த உறவுகள் காரணமாக மூன்று விமானங்களையும் 7.5 மில்லியன் டொலர் செலவில் புதுப்பிக்க முடிந்துள்ளது. இதற்கான விலைமனு திறந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் அவர்களுடன் பல்வேறு மட்ட பேச்சுவாரத்தைகள் நடத்தி இலங்கைக்கு பொருத்தமான விலையில் இவற்றை புதுப்பிக்க முடிந்துள்ளது. எதிர்காலத்தில் எமது விமானப் பலத்தை மேலும் மேம்படுத்த பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கமைய எம்மிடம் எஞ்சியுள்ள மற்றுமொரு ஏ.என் - 32 விமானத்தையும் புதுப்பித்தல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.

அதேபோன்று ஹெலிகொப்டர்களையும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும். அரசாங்கத்திற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

நாட்டின் படைபலம் அதிகரிக்க அதிகரிக்க அது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அவர்களுக்கான தேவைகளை துரிதமாக பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது  பாதுகாப்பு செயலாளரும், படைத்தளபதியும், விமானப்படை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பு சேவையை பாராட்டியதுடன் இந்த நிகழ்வினை நினைவு கூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்

நன்றி : www.thinakaran.lk