--> -->
முகப்பு   சுயவிவரங்கள்   பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி

ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா WWV RWP RSP VSV USP ndc psc

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி


ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா டப்ளியூடப்ளியூவி ஆர்டப்ளியூபி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி எம்பில் அவர்கள் 23 ஆவது இராணுவத் தளபதியாக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி முப்படைகளின் சேனாதிபதியும் மற்றும் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டார். 2020 டிசம்பர் மாதம் 28 ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பு சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவரை நான்கு நட்சத்திர ஜெனரல் நிலைக்கு உயர்த்தினார்.

ஜெனரல் சவேந்திர சில்வா என அறியப்படும் ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானியும், கஜபா, கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமாக கடமை வகித்து கொண்டிருந்த நிலையில் இராணுவ தளபதியாக பதவியுயர்த்தப்பட்டார். தற்போது, இவர் சிறப்புப் படையணி மற்றும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் இரணுவத் தளபதியாகவும் 2020 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டார்.

இராணுவ தலைமையகத்தில் அதிஉயர் பதவிகலான பதவி நிலை பிரதானி மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமை வகித்துள்ளார். இவர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் நிரந்தர படை அதிகாரி பாடநெறி இலக்கம் 19 இன் கீழ் மார்ச் மாதம் 5 ஆம் திகதி 1984 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டார். இவர் தனது கல்வியை புனித தோமஸ் கல்லூரியில் மேற்கொண்டார். பாடசாலை செல்லும் நாட்களில் திறமையான மாணவனாகவும், 11 முதன்மை கிரிகட் அணித் தலைவராகவும், கல்லூரியில் கெடெற், பேண்ட் பிரிவிலும் அங்கத்தவராக இருந்துடன், கல்லூரியின் கிரிக்கட் அணித் தலைவராகவும், பாடசாலையின் சிரேஷ்ட மாணவ தலைவராக இருந்துள்ளார்.

இவர் இராணுவ கல்வியற் கல்லூரி பயிற்சி நிறைவின் பின்னர் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கஜபா படையணிக்கு உட்புகுத்தப்பட்டார். பின்னர் 1 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாகவும், பிளட்டுன் கொமாண்டராகவும், விஷேட சேவைக் குழுவிலும் , விரைவாக செயற்படும் படையணி (RDF) அதாவது தற்போதைய விஷேட படையணியிலும் கடமைகளை வகித்துள்ளார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி) மற்றும் பல வெளிநாட்டு பாதுகாப்பு கல்லூரிகளில் (பி.எஸ்.சி) பட்டம் பெற்ற இராணுவத்தின் முதல் தளபதி என்ற பெருமையை ஜெனரல் ஷவேந்திர சில்வா பெற்றுள்ளார். பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி சமீபத்தில் அவரது கல்வி சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இராணுவத் தளபதியின் புகைப்படத்தை ‘Wall of Fame’ பெருமையின் சுவர் எனும் பெயரில் தான் தயாரித்த முதல் இராணுவத் தளபதியாக வெளியிட்டது.

2ம் லெப்டிணட் அதிகாரியாக இராணுவத்தில் மூன்று வெவ்வேறு பதக்கங்களை பெற்ற முதல் அதிகாரியான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவத்தில் சிறப்பு விருதுகளான வீர விக்ரம விபூஷணம் (WWV), ரண விக்ரம பதக்கம் (RWP), இரண சூரிய பதக்கம்(RSP), விசிஷ்ட சேவா விபூஷணம்(VSV) , மற்றும் உத்தம சேவா பதக்கம் (USP) போன்ற உயர் விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இராணுவத்தில் 37 வருட சேவைகளை பூர்த்தியான நிலையில் இராணுவத்தில் உயர் பதவிகளான பதவிநிலை, வழிக்காட்டி, கட்டளை மற்றும் இராஜதந்திர நியமனங்கள் , இராணுவ திட்டமிடல் பணியகத்தின் பதவிநிலை 1 தரத்திலும், இராணுவ பயிற்சி பணியகத்தின் பதவிநிலை 1 தரத்திலும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பதவிநிலை 1 தரத்திலும், இராணுவ செயலகத்தில் பதவிநிலை 1 தரத்திலும், நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாகவும் கடமை வகித்துள்ளார்.

இவர் இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் இருந்து மேஜர் ஜெனரல் வரையான நிலையில் இராணுவத்தில் அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இவர் 1991 ஆம் ஆண்டு இராணுவ நிரந்தர அதிகாரி பயிற்சி இல 37 கீழ் பயிற்சியை மேற்கொள்ளும் பிரதம பயிற்சி அதிகாரியாக இராணுவ கல்வியற் கல்லூரியில் இருந்தவேளையில் இந்த பயிற்சியில் வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் முதற் தடைவையாக இந்த பயிற்சியில் இணைந்து கொண்டனர். பின்னர் 2005 ஆம் ஆண்டு இராணுவ கல்வியற் கல்லூரியின் கட்டளை அதிகாரியாக இவர் விளங்கிய சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் பல நூறு இராணுவ இளம் அதிகாரிகளை எமது நாட்டிற்கு உருவாக்கினார்.

எல்டிடிஈ பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட “வன்னி மனிதாபிமான நடவடிக்கைக்கு” 53 ஆவது படைப் பிரிவின் தளபதியாக தலைமை வகித்தார். இவர் பணிகளில் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டார். 200 கிலோ மீற்றர் தூரத்தை இவரது தலைமையில் பங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். அத்துடன் புதுமாத்தளன் பிரதேசங்களிலிருந்து எல்டிடிஈ பயங்கரவாதிகளது பெருந் தொகை ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் 2009 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டன. மேலும் பல நூறு அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்தவர். இந்த வீரச்செயற்பாடுகளை கௌரவித்து இவரை இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டார்.

2010 ல், நியூயார்க் ஐக்கிய நாடுகளின் தூதராகவும் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். இலங்கை வரலாற்றில் இலங்கையில் வெளியுறவு சேவைக்கு ‘தூதர்’ பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒரே இராணுவ அதிகாரி அவர். ஜெனரல் ஷவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான உயர் மட்ட ஆலோசனைக் குழுவிக்கு ஐ.நா. பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட முதல் இலங்கை வீரர் ஆவார். அவரது சிறப்பான ஆலோசனைகளின் விளைவாக, அக்காலக் கட்டத்தில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மேலும், உலகளாவிய பிராந்திய மோதல்கள் மற்றும் அமைதி காக்கும் விடயங்களைக் கையாண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அரசியல் மற்றும் காலனித்துவக் குழுவில் இலங்கையின் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு இராணுவ வைத்தியசாலையை முறையே மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகங்களில் நிறுவினார்.

உள்நாட்டு பயிற்சிகளுக்கு மேலதிக பிரான்ஸ், கிரீஸ், இந்தியா, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு துறைகளில் பல பயிற்சி பாடநெறிகளை பின்பற்றியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெருமை வாய்ந்த முன்னாள் மாணவரான இவர், “தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பில் சிரேஸ்ட நிர்வாகி” திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இவர் இந்தியாவின் மதிப்புமிக்க தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டதாரி ஆவார். மேலும், மனிதவள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பெற்ற இவர், அமெரிக்காவில் ‘உளவியல் செயல்பாடுகள்’ பயிற்சியில் தகமை பெற்றவர். வர்ஜீனியா குவாண்டிகோவில் உள்ள புகழ்பெற்ற மரைன் கோர்ப்ஸ் போர் கல்லூரியில் வருகை தரும் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தேசத்திற்கு வழங்கப்பட்ட உன்னத சேவைகளைப் பாராட்டும் விதமாக, அவருக்கு “ஸ்ரீ லங்கேஸ்வர அபாரத மெஹியும் விஷாரத ஜோதிகாதாஜ வீரப்பிரபாத தேசமண்ய ஜாதிக கௌரவனாம சம்மன உபாதி சன்னாஸ் பாத்ரய”, “வீர கஜேந்திர சங்ரமாஷ்ர ஜாதிக கௌரவனாம சன்னஸ் பாத்ரய, வீர விக்ரம தேசபிமான விஸ்வ கீர்த்தி ஸ்ரீ ரணசூர (ஒரு சாதாரண நபர் பெறக்கூடிய மிகவும் மதிப்புமிக்க விருதுகள்) இலங்கை பௌத்த ஒழுங்கின் மூன்று பிரிவுகளால் இறையாண்மையையும் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான உண்மையான பக்திக்கு புத்தரின் அறிவொளியின் 2600 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக, “2600 ஆண்டுகளில் இருந்து இலங்கை அடையாளம்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதேபோல், 2019 ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரான மாத்தளை விஸ்வகீர்த்தி ஸ்ரீ மாத்தள வீர புத்ர கௌரவ ' பட்டம் வழங்கி கௌரவித்தது.

ஜெனரல் ஷவேந்திர சில்வா விளையாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்ட தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராகவும் உள்ளார், பாதுகாப்பு சேவைகள் ஹாக்கி சபையின் தலைவர் ஆவார். இலங்கையில் அண்மையில் கோவிட் -19 தொற்றுநோய் பரவலினை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக மார்ச் 16, 2020 நியமிக்கப்பட்டார்.