மனிதாபிமான நிவாரண உதவிப் பொருற்களுடன் மியான்மர் விமானப்படையின் (MAF) Y-8 விமானம் இலங்கையை வந்தடைந்து
දෙසැම්බර් 08, 2025மியான்மர் அரசாங்கம் அன்பளிப்பு செய்த ஒரு தொகுதி மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் இன்று (டிசம்பர் 06, 2025) இலங்கையை வந்தடைந்தது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தியாவசிய இயற்கை அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மியான்மர் விமானப்படையின் (MAF) Y-8 விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.
நிவாரணப் பொருட்கள் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. இலங்கைக்கான மியான்மர் தூதுவர் அதிமேதகு Marlar Than Htaik, இவற்றை இலங்கை அதிகாரிகளிடம் கையளித்தார்.
Zaw Phyo Win உட்பட மியான்மார் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து பேர் கொண்ட குழு உடன்பட இலங்கை விமானப்படை திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தேசபிரிய சில்வா மற்றும் பல இலங்கை அரசாங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
අනුග්රහය - www.airforce.lk