--> -->

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு அரசு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கிறது

செப்டம்பர் 12, 2020
  •    தீவிர சுற்றிவளைப்பின்போது கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் சிறைச்சாலைகளில் அதிக இடவசதி தேவை
  •     தகவல் வழங்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கும் முறையை வலுப்படுத்த  திட்டம்
  •     சிறிய அளவில் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபடுவோர் உட்பட   அனைவருக்கும் தண்டனை
  •     போதைபொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான  வாய்ப்புகளை அதிகரிக்க திட்டம்   
  •     போகம்பர சிறைச்சாலை புனர் நிர்மானம் செய்யப்படும் 

திட்டமிட்ட குற்றச்செய்லகளை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பான தேசம் மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும்  அரசின் தூரநோக்கு கொள்கையில் இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கும் வகையில்  அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க அதிகம் கவனம் செலுத்தப்படும் அதேவேளை, போதைப்பொருள் பாவனையாளர்கள் முதல் மோசமான போதைப்பொருள்  வியாபாரிகளும்  தண்டிக்கப்படுவர். அத்துடன் அரசாங்கம் ஒருபோதும் எவ்வித குற்றச்செயல்களையும்  அனுமதிக்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியை குறைப்பதற்கு கண்டியிலுள்ள போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா என ஆராயும் பொருட்டு பாதுகாப்பு செயலாளர் இன்று (12) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போதைபொருள் தொடர்பில் பொலிஸார் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருவதால்  தற்போது சிறைச்சாலைகளில்  கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையானது ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக தெரிவித்த செயலாளர், கைதிகளுக்கு இடவசதிகளை ஏற்படுத்திகொடுக்கும் வகையில் சிரைச்சாளைகளில் இடவசதியினை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.        
 
போதைபொருளுக்கு அடிமையானவர்களை சாதாரண பிரஜையாக சமூகத்தில் மீண்டும் இணைக்கும் வகையில் நன்கு திட்டமிடப்பட்ட  புனர்வாழ்வு நடவடிக்கையை உருவாக்குவதே அரசின் எதிர்பார்ப்பாகும் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பான தேசமொன்றை உருவாக்கும் எமது முயற்சிகளுக்கு, குறிப்பாக போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது எதிர்கால சந்ததியினரை பாதுக்காக்க அரசாங்கம்  பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்ப்பதாக  அவர் சுட்டிக்காட்டினார்.  

பொதுமக்களினால் வழங்கப்படும் தகவல்களுக்காக அண்மையில் அறிமுப்படுத்தப்பட்ட வெகுமதி முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்கான அரசின் எதிர்பார்ப்பானது திட்டமிட்ட  குற்றச்செயல்களை விசேடமாக போதைபொருள் கடத்தல் நடவடிக்கைகளை  முறியடிப்பததற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என இதன்போது செயலாளர் தெரிவித்தார்.

அனைத்து கைதிகளும் சிறையில் அடைக்கப்படுவர் என தெரிவித்த செயலாளர், கைதிகளும் மனிதர்களே,  இலங்கை பிரஜைகளே. எனவே போகம்பர சிறச்சாலையில் வசதிகள் காணப்பட்டபோதும் அதனை மேலும் புனர்நிமானம் செய்யவேண்டியுள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.   

பூஸா சிறைச்சாலையில் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத் போராட்டம்  தொடர்பில் வினவப்பட்டபோது, அதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், போராட்டத்தை முன்னெடுத்துள்ள சிறைக் கைதிகளே நாட்டிலுள்ள மிகப்பெரிய குற்றவாளிகள் எனவும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை மாத்திரமே தம்மால் நிறைவேற்ற முடியும் எனவும் கமல் குணரத்ன தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிரிழந்த எல் ரீ ரீ ஈ உறுப்பினர் திலீபன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஓரு நோயாளி எனவும், அவர் உண்ணாவிரதப் போராட்டம் ஈடுபட்டவேலையில் உயிரிழந்தார் என சுட்டிக்காட்டிய அவர், ஏனையோர் இரண்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து பின்னர் தங்களது போராட்டத்தை இடைநடுவில் கைவிட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.