பாதுகாப்பு செய்திகள்
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Sriniva Maddula, இன்று (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
எதிர்வரும் பரஸ்பர மதிப்பீட்டிற்கான ஆயத்தங்களை இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு மதிப்பாய்வு செய்தது
இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு, இலங்கையின் தகுதிவாய்ந்த அதிகாரி என்ற முறையில், பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் தலைமையில், ஜனவரி 12, 2026 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. மார்ச் 2026 இல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள எதிர்வரும் பரஸ்பர மதிப்பீட்டிற்காக இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு பங்குதாரர்களின் தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024/2025 நிறைவு பெற்றது
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024/2025 நேற்று (ஜனவரி 12) பனாகொடை இராணுவ முகாமில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.
யுத்த வீரர்களின் பிள்ளைகளுக்கு ‘வீரு சிசு பிரதீப்ப’ புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன
பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 13) நடந்த ஒரு நிகழ்வில் யுத்த வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு விரு சிசு பிரதீப்ப கல்வி புலமைப்பரிசில் வழங்கப்பட்டடன.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு
ஆண்டியம்பலத்தைச் சேர்ந்த திருமதி Christeen Oellrich, இன்று (ஜனவரி 12) பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுக்கு ஒரு சக்கர நாற்காலி ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு ICU படுக்கைகள் அன்பளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (MoD SVU) தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ், இன்று (ஜனவரி 09) அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு நான்கு (04) ICU படுக்கைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இது அங்குள்ள முக்கியமான பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
பாராளுமன்றத்தில் உயர்மட்டக் குழு கூடியது
வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) நேற்று (ஜனவரி 8) பாராளுமன்ற வளாகத்தில் மற்றொரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமை தாங்கினார்.
அமெரிக்க தூதர் பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து வெளியேரவுள்ள, அமெரிக்க தூதர் மேதகு Julie Chung, பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜனவரி 8) பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி
தலைமையில் கூடியது
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரைச் சந்தித்தார்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி (Upendra Dwivedi), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஜனவரி 7) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி Upendra Dwivedi, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜனவரி 7) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்து சட்டம், 05 05 2025 தொடர்பான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது
குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் முகங்கொடுக்கக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் பாதுகாப்பு மற்றும் சட்டத் துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏட்படுத்தும் நோக்கில், குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்து, இல 05 , 2025 சட்டம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 6) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தகவல் வெளிப்படுத்தல் தொடர்பான சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் அவற்றை மீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்த முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தது. ஒழுங்கமைக்கப்பட்ட நிதி குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியில் இவை முக்கியத் தூண்களாகக் கருதப்படுகின்றன.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களின் ஒரு நாள் சம்பளம் 372 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு புத்தாண்டு தினத்தில் அதன் சமூக நலத்திட்டங்களை ஆரம்பித்தது
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU), அதன் தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், இன்று (ஜனவரி 01) புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சமூகநல நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது.
புத்தாண்டு நிகழ்வில் கூட்டு முயற்சியின் அவசியத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று காலை (ஜனவரி 01) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற புதிய ஆண்டின் பணிகள் ஆரம்பித்தல் மற்றும் அரச ஊழியர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்
வெளிநாட்டு மனிதாபிமான உதவிகள்
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக, 22 நாடுகள் மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளன. இந்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே முறையாக , ஒருங்கிணைக்கப்பட்டு, திறம்பட பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஜனாதிபதி அவர்களால் வெளிநாட்டு நிவாரண உதவி (பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) நிறுவப்பட்டது.
ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச் செய்தி
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம்.
வாழ்த்துச் செய்தி
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் ஐந்தாவது HL-FRAC
கூட்டம் நடைபெற்றது
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று (டிசம்பர் 23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
எகிப்திய தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதர், மேதகு Adel Ibrahim அவர்கள், நேற்று (டிசம்பர் 23) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சவால்மிக்க சந்தர்ப்பங்களில் பின்வாங்காமல் தமது பொறுப்புகளை நிறைவேற்றும்
போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும்
ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
புப்புரெஸ்ஸவில் ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் மருத்துவ முகாம்
அண்மையில் ஏட்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (MoD SVU), பெண் மருத்துவர்கள் சங்கத்துடன் (LDA) இணைந்து, டிசம்பர் 20 அன்று ஒரு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது.

















